இனி பூச்சி இல்லை, நோய் இல்லை: உங்க தோட்டத்து செடிகள் கொத்து கொத்தா காய்க்க இந்த ஹோம்மேட் உரம் யூஸ் பண்ணுங்க

இரசாயன உரங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவழிப்பதை நிறுத்திவிட்டு, இப்போது உங்கள் பயிர்களுக்குத் தேவையான சத்துக்களையும், பாதுகாப்பையும் இயற்கையான முறையில் வழங்கலாம்.

இரசாயன உரங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவழிப்பதை நிறுத்திவிட்டு, இப்போது உங்கள் பயிர்களுக்குத் தேவையான சத்துக்களையும், பாதுகாப்பையும் இயற்கையான முறையில் வழங்கலாம்.

author-image
WebDesk
New Update
garden

Homemade organic fertilizer white vinegar DIY compost

நீங்கள் வீட்டிலேயே தோட்டம் வைத்திருப்பவராக இருந்தாலும் அல்லது பெரிய அளவில் விவசாயம் செய்பவராக இருந்தாலும், இனி உரங்களுக்காக அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை. வெள்ளை வினிகர் விவசாயத்தில் நம்பமுடியாத பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அனுபவமிக்க விவசாயிகளும், தோட்டப்பிரியர்களும் ஒருமித்த குரலில் பரிந்துரைக்கும் இந்த எளிய ரகசியத்தை, இன்று உங்களுக்காக இலவசமாகப் பகிர்கிறோம்.

ஏன் வெள்ளை வினிகர்?

Advertisment

வெள்ளை வினிகர் வெறும் சமையல் பொருள் மட்டுமல்ல, இது தாவரங்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான மைக்ரோ நியூட்ரியன்ட்களையும் (நுண்ணூட்டச் சத்துக்கள்), அமினோ அமிலங்களையும் வழங்குகிறது. காய்கறிகள், பழ மரங்கள், பூக்கள் என எந்த வகையான பயிராக இருந்தாலும், வினிகரின் பயன்பாடு அவற்றின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது. பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பயிர்களைக் காத்து, மகசூலை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

இப்போது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த அற்புதமான கலவையைப் பற்றிப் பார்ப்போம். இதைக் தயாரிக்க உங்களுக்குத் தேவைப்படுபவை:

Advertisment
Advertisements

வெள்ளை வினிகர்: 15 மில்லி
பேக்கிங் சோடா: 10 கிராம்
பீர்: 25 மில்லி
தண்ணீர்: 30 லிட்டர்

இந்த நான்கையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கரைசலை உங்கள் பயிர்களின் இலைகள் மீது சீராகத் தெளிக்க வேண்டும். இப்படித் தெளிப்பதன் மூலம்:

*பயிர்கள் செழித்து வளரும்.
*நோய்கள் அண்டாமல், பூச்சிகள் அச்சுறுத்தாமல் இருக்கும்.
*உங்கள் உழைப்பிற்கான பலன் பன்மடங்கு பெருகும்.
*விலையுயர்ந்த உரங்களுக்கு செலவழிப்பதைத் தவிர்க்கலாம்.

இந்த எளிய மற்றும் செலவு குறைந்த தீர்வைக் கொண்டு உங்கள் விவசாயப் பணிகளை மேம்படுத்தி, அதிக மகசூல் பெறுங்கள். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: