வீட்டில் பனீர் தயாரிப்பது எளிதானது, ஆனால் பல்வேறு விருப்பங்கள் இருப்பதால் முடிவெடுப்பதில் உங்களுக்கு குழப்பம் இருக்கலாம். தயிர், எலுமிச்சை மற்றும் வினிகர்- இதில் பனீர் தயாரிக்க சிறந்தது எது?
நிபுணர்கள் கூறியது இங்கே.
தயிர், எலுமிச்சை அல்லது வினிகர் ஆகிய ஒவ்வொன்றிலும் பனீர் தயாரிக்கும் போது அதன் நன்மை, தீமைகள் உள்ளன.
தயிர் ஒரு லேசான சுவை மற்றும் மென்மையான அமைப்பைக் கொடுக்கிறது, ஆனால் லாக்டோஸ் அல்லது பால் அலர்ஜி உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்காது, என்று உணவியல் நிபுணர் வீணா (dietician at Aster Whitefield Hospital, Bangalore) பகிர்ந்து கொண்டார்.
எலுமிச்சை அல்லது வினிகர் போன்ற அதே கர்ட்லிங் விளைவை அடைய அதிக தயிர் தேவைப்படுகிறது, இது செயல்முறையை மெதுவாக்குகிறது, ”என்று ஊட்டச்சத்து நிபுணர் ரேஷ்மா (consultant nutritionist at SPARSH Hospital, Bangalore) கூறினார்.
பனீர் தயாரிப்பதில் எலுமிச்சை விரைவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது, தேவையான நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது மற்றும் சிறிது புளிப்பு சுவையை சேர்த்து அதன் சுவையை மேம்படுத்தும். இருப்பினும், நன்கு கழுவாவிட்டால், பனீர் அதிகப்படியாக புளிக்கும்.
பனீரின் அமைப்பை அதிகமாக மாற்றாமல் இருக்க எலுமிச்சை கவனமாக கையாள வேண்டும், என்று ரேஷ்மா கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/paneer.jpg)
வினிகர், ஒரு திறமையான மற்றும் விரைவான விருப்பமாகும், இது பனீரின் சுவையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. இருப்பினும், இது ஒரு உறுதியான அமைப்பை ஏற்படுத்தலாம், அதிகப்படியான அசிடிட்டி தடுக்க துல்லியமான அளவீடு தேவைப்படுகிறது.
இந்த பொருட்கள் பயன்படுத்த பாதுகாப்பானதா?
லாக்டோஸ் அல்லது பால் அலர்ஜி உள்ளவர்கள் தயிரை பயன்படுத்த வேண்டாம் என்று வீணா எச்சரித்தார், ஏனெனில் இது செரிமான அசௌகரியம் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும்.
எலுமிச்சை, சிட்ரஸ் அலர்ஜி, வயிறு கோளாறு அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றைத் தூண்டும், ஆனால் அதன் அமில உள்ளடக்கம் காரணமாக பெரும்பாலான மக்களுக்கு இது பாதுகாப்பானது. இருப்பினும், சிட்ரஸ் அலர்ஜி உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு கடுமையான எதிர்வினை இருக்கலாம், குறிப்பாக வெறும் வயிற்றில்.
நெஞ்செரிச்சல் அல்லது வயிறு கோளாறு உள்ளவர்களைத் தவிர, வினிகர் பெரும்பாலும் பாதிப்பில்லாதது. அசிட்டிக் ஆசிட்டுக்கு அலர்ஜி உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும், என்று வீணா குறிப்பிட்டார்.
நன்கு கழுவாவிட்டால் வினிகரின் கடுமையான நறுமணம் நீடிக்கக்கூடும். ஆசிட் சென்சிட்டிவிட்டி உள்ளவர்கள் அல்லது லெள ஆசிட் டயட் பின்பற்றுபவர்கள் வினிகரை குறைவாகப் பயன்படுத்த வேண்டும், என்று ரேஷ்மா கூறினார்.
சிறந்த விருப்பம் எது?
தயிர் ஆரோக்கிய காரணங்களுக்காக மூன்றில் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது, இது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் புரோபயாடிக்குகளைக் கொண்டுள்ளது மற்றும் எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
வீட்டில் பனீர் தயாரிப்பதற்கான எளிய வழி, பாலை கொதிக்க வைத்து, உங்களுக்கு விருப்பமான கர்ட்லிங் ஏஜெண்ட் சேர்க்கவும். பால் கொதிக்கும்போது, அது திடப்பொருளாகப் பிரிகிறது. முழுமையாக திரிந்தவுடன், ஒரு மஸ்லின் துணியைப் பயன்படுத்தி அதை வடிகட்டவும்.
போனஸ் குறிப்பு: தயாரித்த பனீரின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றுவது மேலும் திரிவதை தடுக்கிறது மற்றும் அது கடினமாக மாறாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
Read in English: Yogurt, lime or vinegar the best ingredient for making paneer? Expert reveals
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“