பருக்கள் வலிமிகுந்த தொல்லை தரும். சில வகையான ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அல்லது முகத்தை அசுத்தமாக வைத்திருந்தால் பருக்கள் ஏற்படலாம்.
எனவே பருக்கள், அது விட்டுப்போகும் வடுக்கள், தழும்புகளை பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, சிக்கலைக் கவனித்துக்கொள்வதாக உறுதியளிக்கும் இந்த பயனுள்ள அழகு ஹேக்கை முயற்சிக்கவும்.
வீட்டில் தயாரிக்கப்படும் இந்த பேஸ்ட்டை, ஒரு இரவு தடவினால் போதும், கடினமான பருக்கள் மறைந்துவிடும். முயற்சி செய்து பாருங்கள்!
தேவையான பொருட்கள்
* உளுந்து மாவு – ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு
* கிரீன் டீ தூள் – இரண்டு தேக்கரண்டி
* மஞ்சள் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
* அரிசி தூள் – ஒரு கப் மூன்றில் ஒரு பங்கு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் உளுந்து மாவு மற்றும் க்ரீன் டீ தூள் சேர்த்து கலக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள்தூள் மற்றும் அரிசி பொடியை கலந்து நன்றாக கிளறவும்.
இதில் சிறிது ரோஸ் வாட்டரைச் சேர்க்கவும், அதனால் அவை ஒன்றோடொன்று நன்றாகக் கலக்கும்.
இப்போது, ஈரப்பதத்தைத் தடுக்க காற்றுப் புகாத டப்பாவில் சேமிக்கவும்.
இரவில் அதில் சிறிது எடுத்து, தேவைப்பட்டால் மேலும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து, பேஸ்ட்டை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும்.
உங்கள் காலை தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக, இரவு முழுவதும் அதை விட்டுவிட்டு, காலையில் குளிர்ந்த நீரில் கழுவவும்.
இதை தினமும் இரவில் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
மஞ்சள் தூளில் சில பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை முகத்தை சுத்தமாக வைத்திருக்கும், மேலும் கிரீன் டீ தூள் சருமத்தை ஆற்றும் மற்றும் எரிச்சலைக் குறைக்கும்.
அரிசி தூள் மற்றும் உளுந்து மாவு பரு தழும்புகள் மீது வேலை செய்யும்.
ஓவர் நைட்டில் அழகான சருமம் பெற மறக்காம இந்த ஹேக்கை முயற்சி பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“