காய்ந்த பூக்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு நம் வீட்டிலேயே சாம்பிராணி செய்யலாம். இதற்கான செய்முறை குறித்து தற்போது பார்க்கலாம். எளிமையான முறையில் இருப்பதால் இந்த வழிமுறையை சுலபமாக பின்பற்றலாம்.
வீட்டில் பூஜைக்கு பயன்படுத்திய மலர்கள் அனைத்தும் காய்ந்து போன பின்னர் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அத்துடன் வேட்டிவேர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தனியாக ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலக்க வேண்டும். இதையடுத்து, ரோஸ் வாட்டர் மற்றும் நெய் ஆகியவற்றை இவற்றுடன் கலந்து புட்டு மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இறுதியாக, கோன் வடிவத்திற்கு இந்தக் கலவையை பிடித்து எடுத்து காய வைத்தால் ஹோம்மேட் சாம்பிராணி தயாராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“