ஸ்க்ரப் செய்வது உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், இது உங்கள் சருமத்தை எக்ஸ்ஃபாலியேட் செய்யும். சரும துளைகளில் இருந்து அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்யை நீக்க உதவும்.
நடிகரும் அழகு நிபுணருமான தருணாவின் கூற்றுப்படி, மாசுபாடு, வெப்பநிலை அதிகரிப்பு, ஆரோக்கியமற்ற தினசரி நடைமுறைகள் மற்றும் முறையற்ற உணவு ஆகியவை நம் சருமத்தை மந்தமாக ஆக்குகின்றன. இதனால் சருமத்தில் நீரிழப்பு மற்றும் எண்ணெய் போன்றவை உருவாகிறது. இது முகப்பரு வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
“ஸ்க்ரப்கள் உடனடி தீர்வுகளைத் தருகின்றன. ஸ்க்ரப்களைப் பயன்படுத்தி நமது சருமத்திற்கு கூடுதல் ஊட்டச்சத்தை வழங்குவது வறட்சியைக் குறைக்கிறது, சருமத்தில் எண்ணெய் படிவதைத் தவிர்த்து, டேன் –ஐ குறைத்து, சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
ஸ்க்ரப்பிங் செய்வது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இது இன்னும் கூடுதலான தோல் நிறத்தை கொடுக்கும். வியர்வை மற்றும் எண்ணெய் படிவுகளை அகற்ற சருமத்தை சுத்தப்படுத்தி புத்துணர்ச்சியூட்டுவது அவசியம்.
வீட்டிலேயே எளிதில் கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து ஸ்க்ரப்களை தயாரிக்கலாம். அவற்றின் பயன்பாடுகள் இதோ!
சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் பாதாம் முதல் மற்றும் மிகவும் பயனுள்ள மூலப்பொருள் ஆகும். பாதாமில், நிறைவுறா கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் சருமத்திற்கு ஆசீர்வாதமாக இருக்கும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தூள் செய்யப்பட்ட பாதாம் ஒரு எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது, மேலும் இறந்த மற்றும் வறண்ட சருமத்தை நீக்குகிறது.
தேன் அடுத்த மந்திர மூலப்பொருள் ஆகும். இது கிளீன்ஸராக செயல்படும் அதேவேளையில் சருமத்துக்கு ஈரப்பதமூட்டுகிறது. சருமத்தில் எண்ணெய் படிவதை தடுக்க பயன்படும் மற்றொரு மூலப்பொருள் முல்தானி மட்டி ஆகும்.
இவை அல்லது வேறு ஏதேனும் ஸ்க்ரப்பை தோலில் மெதுவாக மசாஜ் செய்யவும். தோல் மிகவும் சென்சிட்டிவ் ஆன உறுப்பு, கடினமான செயல் அதன் அமைப்பை சேதப்படுத்தும் என்பதால் மென்மையாக இருப்பது முக்கியம்.
அழகுக்கலை நிபுணர் வரலக்ஷ்மி, உங்கள் பணத்தை சேமிக்க உதவும் பல்வேறு ஹேக்குகளை வழங்குகிறார்.
வீட்டில் கிடைக்கும் குறைந்த பட்ச பொருட்களைக் கொண்டு ஒருவர் தன்னைத் தானே அழகுபடுத்திக் கொள்ளலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளை வீட்டில் செய்யும் ஸ்க்ரப்களில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம். ஏனெனில் அவை இறந்த செல்களை நீக்கி, சருமத்தில் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கின்றன.
ஸ்க்ரப்பிங் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளைத் தடுக்கிறது, மேலும் இது சருமத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான இயற்கையான வழியாகும்.
ஒரு முழுமையான ஸ்க்ரப் செய்த பிறகு, ஃபேஸ் மாஸ்க் அணிவது அல்லது உங்கள் முகத்தில் ஏதேனும் மூலிகைப் பொருட்களை அப்ளை செய்வது அவசியம், ஏனெனில் எக்ஸ்பாலியேஷன் செய்வதால், சருமத்தில் துளைகள் திறக்கிறது. நீங்கள் மாஸ்க் அணியாவிட்டால் அதில் அழுக்கு குவிந்து விடும் என அழகு நிபுணர் கூறுகிறார்.
பாதாம் ஸ்க்ரப்
4-5 பாதாம் பருப்புகளை மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
2 டீஸ்பூன் தேன்
2 டீஸ்பூன் ஆர்கான் எண்ணெய். இது ஸ்வீட் பாதாம் எண்ணெய், அவகடோ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது உங்கள் சருமத்துக்கு ஏற்ற வேறு எந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
முறை:
முகத்தை சுத்தம் செய்த பிறகு, ஸ்க்ரப்பை குறைந்தது 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். மென்மையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முகப்பரு இருந்தால் ஸ்க்ரப்பிங் செய்வதைத் தவிர்க்கவும்.
மசாஜ் செய்த பிறகு குறைந்தது 10 நிமிடங்களுக்கு ஸ்க்ரப்பை மாஸ்க் போல வைக்கவும். இதை 15 நிமிடங்கள் வைத்திருந்தால் இன்னும் நல்லது!
இப்போது மெதுமெதுவாக மசாஜ் செய்து உங்கள் முகத்தை கழுவவும்.
கடைசியாக உங்களுக்கு பிடித்த மாய்ஸ்சரைசர் அல்லது ஃபேஷியல் எண்ணெய் சில துளிகள் எடுத்து, முகத்தில் தடவவும்.
(குறிப்பு: தொடர்ந்து ஸ்க்ரப்பிங் செய்வது, சருமத்தின் அமைப்பை சேதப்படுத்தும். எனவே வாரத்திற்கு ஒரு முறை ஸ்க்ரப்பிங் செய்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.