நம் தலைமுடியை பளபளப்பாகவும், பட்டுப் போலவும், நீளமாகவும், பொடுகு இல்லாததாகவும் மாற்ற, இந்த பிரச்னைகளை சரி செய்வதாகக் கூறும் பல தயாரிப்புகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம். ஆனால் சருமத்தைப் போலவே, உங்கள் தலைமுடிக்கும் அன்பும் கவனிப்பும், அதன் வகைக்கு ஏற்ற தயாரிப்புகளும் தேவை. அதுபோல எதையும் மற்றும் எல்லாவற்றையும் பயன்படுத்துவது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். முடியில் கெரட்டின் என்ற புரதம் உள்ளது, இது மயிர்க்கால்களில் (hair follicles) உற்பத்தி செய்யப்படுகிறது, அங்குதான் புதிய முடி செல்கள் உருவாகின்றன.
இந்த செயல்பாட்டின் போது, பழைய செல்கள் படிப்படியாக தோலில் இருந்து வெளியேற்றப்பட்டு புதியவை உருவாக்கப்படுகின்றன. இந்த செயல்முறையின் அடிப்படையில், ஒரு முடி இழை மாதத்திற்கு சுமார் 1 செ.மீ. வளரும்.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜிஸ்ட் கூற்றுப்படி, ஒவ்வொரு நபரின் உச்சந்தலையில் 100,000 முதல் 150,000 முடி இழைகள் உள்ளன, மேலும் ஒரு நாளைக்கு 50 முதல் 100 இழைகள் வரை உதிர்வது இயல்பானது. ஆனால் மருந்துகளின் பக்க விளைவுகள், ஹார்மோன் மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகள் முடி உதிர்வை அதிகரிக்கலாம்.
தோல் மருத்துவர் ரிங்கி கபூர் கூறுகையில், “கடையில் வாங்கும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை நம்பிக்கைக்குரியதாகத் தோன்றினாலும், அவை அதிக அளவு ரசாயனங்களைக் கொண்டிருக்கலாம்.
பல தயாரிப்புகள் முடி உதிர்தலில் இருந்து உடனடி நிவாரணம் தருகின்றன, ஆனால் அத்தகைய முடிவுகள் தற்காலிகமானவை மட்டுமே, மேலும் உங்கள் முடி உதிர்வு மோசமாகலாம். அதற்குப் பதிலாக இயற்கையான பொருட்களைக் கொண்ட இயற்கையான வீட்டு வைத்தியங்களை ஒருவர் தேர்வு செய்யலாம், இவை பக்க விளைவுகள் இல்லாதது என்றும் நிபுணர் மேலும் கூறினார்.
அதுதான் இன்று உங்களுக்காக எங்களிடம் உள்ளது, பட்டுப்போன்ற, மிருதுவான கூந்தலுக்கு உறுதியளிக்கும் செஃப் மேக்னா கம்தார் முயற்சி செய்து பரிசோதித்த இயற்கை ஷாம்பு.
எனது பாட்டிக்கு நீண்ட பட்டுப் போன்ற முடி இருந்தது, இதை அவர் என் அம்மாவுக்குக் கற்றுக் கொடுத்தார், என் அம்மா இந்த ஷாம்பூவை என் சகோதரி மற்றும் என் தலைமுடியில் பயன்படுத்துவார். இத்தனை வருடங்களாக, கடையில் வாங்கும் ஷாம்புக்குப் பதிலாக, இந்த இயற்கையான வீட்டில் தயாரிக்கப்படும் ஷாம்பூவைத் தான் பயன்படுத்துகிறோம். இந்த ஷாம்பு மிகவும் சிறந்தது, இயற்கையானது மற்றும் பக்கவிளைவுகள் இல்லாதது; மேலும் பல நன்மைகள் உள்ளன என்று செஃப் மேக்னா கம்தார் கூறினார்.
தேவையான பொருட்கள்
* 100 கிராம் பூந்திக்கொட்டை (Soapnut)
*20 கிராம் சீகைக்காய்
*20 கிராம் உலர வைத்த நெல்லிக்காய்
*2 கப் தண்ணீர்
செய்முறை
முதலில், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காயில் இருந்து விதைகளை அகற்றவும்.
*பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுக்கவும்.
* நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காய் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து, தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
*அதை ஆற விடவும்.
*பூந்திக்கொட்டையின் அனைத்து கூழ்களையும் பிழிந்து கொள்ளவும்.
*ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி (not a fine strainer) ஷாம்பூவை வடிகட்டவும், இதனால் நீங்கள் திக்கான ஷாம்பூ பெறுவீர்கள்.
*இதை பாட்டிலில் சேமிக்கவும்.
செஃப் கம்தார் பின்வரும் நன்மைகளைப் பகிர்ந்து கொண்டார்:
*இது 100% இயற்கையான ஷாம்பு ஆதலால் கடையில் வாங்கும் ரசாயன ஷாம்புகளின் அளவு நுரை வராது.
*இதை பயன்படுத்துவதற்கு முன் முடிக்கு எண்ணெய் தடவ பரிந்துரைக்கப்படுகிறது. சிலர் இந்த ஷாம்பூவைப் பயன்படுத்திய பிறகு தலைமுடி சிறிது வறண்டு போகலாம். அப்ளை செய்யும் போது கவனமாக இருக்கவும். இது உங்கள் கண்களுக்குள் சென்றால், அது உங்களுக்கு எரியும் உணர்வைத் தரும்.
நன்மைகள்
பொருட்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றிப் பேசிய கபூர், சோப் நட் என்று பிரபலமாக அறியப்படும் பூந்திக்கொட்டை, ஒரு ஆயுர்வேத முடி பராமரிப்பு மூலப்பொருள் என்று கூறினார். ஆன்டி ஃபங்கல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்ட இது தினமும் கூந்தலுக்கு பயன்படுத்தக்கூடிய மென்மையான க்ளென்சராக செயல்படுகிறது. இது ஷாம்பூவுக்கு அதன் நுரை போன்ற அமைப்பைக் கொடுக்கிறது, என்று அவர் மேலும் கூறினார்,
நீங்கள் அதை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பின்வரும் காரணங்களை பட்டியலிட்டார்:
* முடியை பளபளப்பாகவும், பொலிவாகவும் ஆக்குகிறது
* முடி நரைப்பதைக் கட்டுப்படுத்த உதவுகிறது
* சிறந்த முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது
* பொடுகை போக்குகிறது
* உச்சந்தலையில் உள்ள பேன்களை அழிக்க உதவுகிறது
தோல் மருத்துவர் மேலும் கூறுகையில் சீகைக்காய், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் நீண்ட மற்றும் ஆரோக்கியமான கூந்தலை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய மருந்து. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சபோனின், வைட்டமின்கள் ஏ, சி, டி, எஃப் மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன, இது முடிக்குத் தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. இது உச்சந்தலையில் இருந்து அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது, ஆனால் உச்சந்தலையின் இயற்கையான pH மற்றும் எண்ணெய் சமநிலையை இன்னும் பராமரிக்கிறது, என்று அவர் மேலும் கூறினார்.
நெல்லி அடர்த்தியான, பளபளப்பான மற்றும் நீண்ட முடியை வழங்குகிறது என்று கபூர் கூறினார். இது ஒரு சக்திவாய்ந்த ஆயுர்வேத சிகிச்சையாகும், இது வைட்டமின் ஏ மற்றும் சி, டானிஸ், அமினோ அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் கொண்டுள்ளது மற்றும் பக்க விளைவுகள் இல்லை. இது இயற்கையான ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது, இதனால் முடிக்கு ஊட்டமளிக்கும் முகவராக மாறுகிறது.
நெல்லிக்காயை நேரடியாக முடியில் தடவலாம் மற்றும் நம் உணவில் கூட உட்கொள்ளலாம். உங்கள் உணவில் நெல்லிக்காயை தவறாமல் சாப்பிடுவது, முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க உதவுகிறது மற்றும் முடியின் வாழ்க்கைச் சுழற்சியை மேம்படுத்துகிறது. இது முடியை பலப்படுத்துகிறது மற்றும் இயற்கையான ஆரோக்கியத்தையும் பிரகாசத்தையும் சேர்க்கிறது என்று கபூர் முடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“