முடி உதிர்வை தடுக்கும்… கெமிக்கல் இல்லாத ஷாம்பூ இதுதான்; டாக்டர் கார்த்திகேயன்
தினசரி தலைக்கு பயன்படுத்தக் கூடிய இரசாயனங்கள் கலக்காத ஷாம்பூ குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அந்த ஷாம்பூவை எப்படி தயாரிப்பது என இதில் பார்க்கலாம்.
பெரும்பாலும் கடைகளில் இருந்து வாங்கும் ஷாம்பூக்களில் இரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக சில சமயங்களில் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனடிப்படையில், இரசாயானங்கள் இல்லாத ஷம்பூவை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம், உலர்ந்த நெல்லிக்காய் கால் கப், உலர்ந்த சீவக்காய் கால் கப், 5 பூந்திக் கொட்டைகள், அரை லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு இயற்கையான முறையில் ஷாம்பூ தயாரிக்கலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
அதன்படி, வெந்தயம், உலர்ந்த நெல்லிக்காய், உலர்ந்த சீவக்காய், பூந்திக் கொட்டைகள் ஆகிய அனைத்தையும் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அடுத்த நாள் காலை இந்த பொருட்களை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு கொதிக்கும் போது அந்த நீரின் நிறம் மாறுபடும். அப்போது அடுப்பை ஆஃப் செய்து விடலாம்.
பின்னர் இந்த நீரை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். இந்த ஷாம்பூவை நமக்கு தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தலாம். இதில் இரசாயனங்கள் சேர்க்காததால் ஒவ்வாமை ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லை. மேலும், முடி உதிர்வு பிரச்சனைக்கும் இந்த ஷாம்பூ தீர்வளிக்கும்.
Advertisment
Advertisement
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.