மேக்கப் போடுவதில் உங்களுக்கு விருப்பமா? வீட்டில் எப்போதும் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி, இயற்கையான முறையில் அழகுப் பொருட்களை தயாரித்து, சிறப்பான அலங்காரத்துக்கு பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு, அழகு பொருட்கள் தயாரிப்பது எளிதானது. இதன்மூலம் நாள் முழுவதும் பளபளப்பான தோற்றத்தை நீங்கள் பெறலாம்!
செம்பருத்தி டிண்ட்
இதற்கு சில செம்பருத்தி தூள் தேவைப்படும் அல்லது செம்பருத்தி சாறு கூட நன்றாக வேலை செய்யும். ஒரு கிண்ணத்தை எடுத்து, ஒரு டீஸ்பூன் கிளிசரின் சேர்த்து, சில துளிகள் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையில், செம்பருத்தி தூள் அல்லது சாறு சேர்க்கவும். அடுத்த கட்டமாக ஷியா வெண்ணெய் கால் டீஸ்பூன் சேர்த்து இறுதியாக இந்த கலவையை 2-3 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின்னர் தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம்.
பீட்ரூட் டிண்ட்
பீட்ரூட் நிறத்தை உருவாக்க இரண்டு வழிகள் உள்ளது. முதலில் ஒரு பீட்ரூட்டை அரைத்து சாறு எடுக்கவும். ஒரு கடாயில், 10 தேக்கரண்டி சாறு சேர்த்து, மிதமான தீயில் வைத்து, கரைசலை கெட்டியாக விடவும். கலவை பாதியளவு வந்ததும் தீயை அணைத்து, அத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்க்கவும். இதில், சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலவையை குளிர்விக்க விடவும். பீட்ரூட் டிண்ட் தயார்.
இதேபோல் மற்றொரு வழியும் உள்ளது. ஆனால் அதற்கு மேலும் சில பொருட்கள் தேவைப்படும். ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் கிளிசரின் மற்றும் வடிகட்டிய தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வைக்கவும். இதனுடன் பீட்ரூட் தூள் சேர்த்து கலவையை நன்கு கிளறவும். கலவை நன்றாக கொதிக்கும் வரை, கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை திக் கன்சிஸ்டன்சியில் பீட்ரூட்டின் மெஜந்தா நிறமாக மாறவேண்டும். இதை கலவையை ஒரு ஜாடியில் சேமித்து, குளிர்சாதன பெட்டியில் 2-3 மணி நேரம் உறைய வைக்கவும். இது சுமார் 2-3 வாரங்கள் வரை நீடிக்கும். ஆனால் குளிர்ந்த சூழலில் வைக்க வேண்டும்.
உணவு வண்ணத்தின் நிறம்
இதற்கும் இரண்டு வழிகள் உள்ளது. முதலில், ஐந்து தேக்கரண்டி கோகோ பவுடரில் கிளிசரின் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதனுடன், சிறிது பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் மூன்று சொட்டு வைட்டமின் ஈ எண்ணெய் சேர்க்கவும். இந்தக் கலவையில் இரண்டு துளிகள் சிவப்பு நிற உணவு வண்ணத்தைச் சேர்த்து நன்கு கலக்கவும். டிண்ட் தயார். இதை அரை மணி நேரம் கழித்து, உங்கள் கன்னங்கள் அல்லது உதடுகளில் பயன்படுத்தவும்.
ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலக்கவும். இதில் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயை விடவும். இந்தக் கலவையில் இரண்டு துளிகள் சிவப்பு நிற உணவு வண்ணத்தைச் சேர்த்துக் கிளறவும். பயன்படுத்துவதற்கு முன், கலவையை 30 நிமிடங்கள் தனியே வைக்கவும்.
வீட்டில் செய்த டின்ட்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு முன், நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் இங்கே!
உங்கள் முகத்தை சுத்தம் செய்து சிறிது மாய்ஸரைசரை தடவவும். இருப்பினும், உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் மாய்ஸரைசர் தேவையில்லை. இப்போது, இளஞ்சிவப்பு பளபளப்பிற்காக உங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட டிண்ட்-ஐ உங்கள் கன்னங்கள் மற்றும் உதடுகளில் மசாஜ் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil