உங்களுக்கு டோஃபு பிடிக்குமா? ஆனால் உங்கள் உள்ளூர் கடையில் எளிதாகக் கிடைக்கவில்லையா? இந்த மசூர் தால் டோஃபுவை முயற்சிக்கவும், இதில் அதிக புரதம் உள்ளது.
வீட்டில் டோஃபு செய்ய உங்களுக்கு ஒரு கப் மசூர் பருப்பு மற்றும் சிறிது தண்ணீர் தேவை. அதே பழைய பனீர் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு சலிப்பாக இருந்தால், இந்த தனித்துவமான மசூர் தால் டோஃபு ரெசிபியை முயற்சி செய்து மகிழுங்கள்.
எப்படி செய்வது?
முதலில், கிண்ணத்தில் 1 கப் மசூர் பருப்பை எடுக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து, மெதுவாக கழுவி, தண்ணீரை வடிகட்டவும். குறைந்தது 3-4 முறை இப்படி பருப்பை கழுவவும்.
இப்போது கழுவிய பருப்பை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் 1½ கப் கொதிக்கும் நீர் ஊற்றவும். சுமார் 20 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்.
தண்ணீர் குளிர்ந்தவுடன், ஒரு மிக்சி ஜாரில் பருப்பை போட்டு, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து, 15 வினாடிகள் இடைவெளியில் அடிக்கவும். தேவைப்பட்டால், சுமார் ¼ கப் தண்ணீர் சேர்க்கவும். மென்மையான கன்சிஸ்டன்சி பதம் வரும் வரை இதை செய்யவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 1½ கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கடாயில் ஏற்கெனவே செய்த பருப்பு பேஸ்ட் சேர்த்து, மிதமான தீயில் சுமார் 8-10 நிமிடங்கள் சமைக்கவும். அடியில் ஒட்டாமல் இருக்க இடையிடையே தொடர்ந்து கிளறவும். சுமார் 8 நிமிடங்களுக்குப் பிறகு, கலவை கெட்டியாகி பளபளப்பாக மாறியிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.
இப்போது தீயை அணைத்து, சுமார் 10 நிமிடங்கள் குளிர விடவும்.
இப்போது ஒரு கண்ணாடி பாத்திரத்தை எடுத்து அதில் கலவையை ஊற்றி, அதை சமமாக பரப்பவும். அடுக்கின் தடிமன் குறைந்தது 1 அங்குலமாக இருக்க வேண்டும். இப்போது பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி, டோஃபுவை சுமார் 4-5 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் பிரிட்ஜில் வைக்கவும்.
செட் ஆனதும், டோஃபுவை வெளியே எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, ரெசிபிகளில் பயன்படுத்தவும்.
மீதமுள்ளவற்றை நீங்கள் பிரிட்ஜில் காற்று புகாத கன்டெய்னரில் சேமிக்கலாம். மசூர் தால் டோஃபுவை எந்த பனீர் சார்ந்த உணவிலும் பயன்படுத்தலாம். முயற்சி செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“