ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கான தேடுதல் முடிவில்லாத ஒன்றாகும். ஆனால் பலவிதமான தோல் பராமரிப்பு ஹேக்குகள், கவர்ச்சியான பொருட்கள் மற்றும் முகக் கருவிகள் ஆகியவற்றுடன், உங்கள் சருமத்திற்கு மிகவும் பயனளிக்கும் நடைமுறைகளில் இருந்து தேர்வு செய்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
ஆனால், நீங்கள் எப்போதாவது ஆயுர்வேத தோல் பராமரிப்பு முறைகளை முயற்சி செய்திருக்கிறீர்களா? பல வீடுகளில் பிரபலமாக இருக்கும், “ஆயுர்வேத தோல் பராமரிப்பு வைத்தியம்’ ஆண்களுக்கும், பெண்களுக்கும் தோலுக்கு தங்க சுரங்கம் போன்றது” என்று மருத்துவர் நித்திகா கோஹ்லி இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார்.
“இந்த பாலினமற்ற வைத்தியம் அடுத்தடுத்த தலைமுறைக்கு அனுப்பப்பட்டு வருகிறது, இதனால் இந்த பண்டைய ரத்தினங்களிலிருந்து அனைவரும் பயனடைய முடியும்,” என்று அவர் கூறினார்.
மேலும் நிபுணர், நீங்களே வீட்டில் செய்யக்கூடிய எளிதான ஃபேஸ் பேக் செய்முறையைப் பகிர்ந்து கொண்டார், அது “உங்கள் சருமம் இழந்த பளபளப்பைப் புதுப்பிக்கவும், உள்ளிருந்து அதைச் சுத்தப்படுத்தவும் மற்றும் உங்கள் சருமத்தை இயற்கையாகப் பராமரிக்கவும் உதவும்” என்று அவர் கூறினார்.
தேவையான பொருட்கள்
* 3 டீஸ்பூன் – மூங் தால்
* 2 டீஸ்பூன் – ஓட்ஸ்
* 3 டீஸ்பூன் – பாசிப்பயிறு
* 2 டீஸ்பூன் – மசூர் பருப்பு
* பெருஞ்சீரகம்
செய்முறை
* கடாயை சூடாக்கி ,அதில் அனைத்து பொருட்களையும் சேர்த்து, குறைந்த தீயில் சிறிது கிளறவும். பொருட்கள் வாசனை வரும் வரை காத்திருக்கவும்.
*மசாலா, பருப்பு வெடிப்பதை கேட்கும் வரை காத்திருங்கள். பிறகு தீயை அணைத்து ஆறவிடவும்.
*கலவை ஆறிய பிறகு பொடியாக அரைக்கவும்.
*இந்த கலவையில்’ ஒரு ஸ்பூன் சந்தனப் பொடியைக் கலந்து காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
எப்படி உபயோகிப்பது:
ஒரு டீஸ்பூன் நீங்கள் தயாரித்த இயற்கை பொடி , இரண்டு டீஸ்பூன் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து நல்ல கலக்கவும்; நிலைத்தன்மை சீராக பொருந்தும் வரை நல்ல கலவையை கொடுக்கவும்.
ஆரோக்கியமான சருமத்துக்கு இந்த ஹோம் மேட் ஃபேஸ் பேக் கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “