ஜலதோஷம், மூக்கடைப்பு மற்றும் இருமல் போன்ற பருவகால பிரச்சனைகள் மிகவும் பொதுவானவை. அதனால்தான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். எனவே இதிலிருந்து விடுபட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வேபர் ரப் பயன்படுத்துவது உண்டு.
இருப்பினும், சந்தையில் இருந்து ரசாயனம் கலந்த பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயே ஏன் அதைச் செய்ய முயற்சிக்கக்கூடாது? இங்கு வீட்டில் வேபர் ரப் தயாரிப்பதற்கான செய்முறை உள்ளது.
தேவையான பொருட்கள்
4-5 ஸ்பூன் நெய்
2 – பச்சை கற்பூரம்
1 - கண்ணாடி கன்டெய்னர்
செய்முறை
வீடியோவில் உள்ளபடி, அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், மிதமான தீயில் வைத்து முதலில் நெய் சேர்க்கவும். பிறகு, கற்பூரம் சேர்த்து கரைக்கவும். அடுப்பில் இருந்து கடாயை எடுத்து, இந்த வேபர் ரப்பை ஒரு கண்ணாடி கன்டெய்னரில் சேமிக்கவும். இது சிறிது நேரத்தில் கடையில் இருந்து வாங்கியது போல கட்டியாகி விடும்.
கற்பூரத்தை நெய்யில் கரைத்த பிறகு, முதலில் கேஸில் இருந்து கடாயை அகற்றிவிட்டு, பிறகு கேஸை அணைக்க வேண்டும். நெய்யை அதிக தீயில் வைக்க வேண்டாம், இல்லையெனில் அது கருகிவிடும்.
கற்பூரம் விஷமுள்ளது, இது வாய் அல்லது பாதிக்கப்பட்ட தோல் வழியாக ரத்தத்தை அடையலாம். உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. பாதுகாப்பாக இருக்க உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடுங்கள். இதை 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். முதன்முறையாக பயன்படுத்துவோர், ஒரு சிறிய பகுதியை பரிசோதித்து, ஒவ்வாமை இருக்கிறதா என்று கவனிக்கவும், என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டில் வேபர் ரப் செய்வது நல்லதா?
சுகாதார நிபுணர் ப்ரீத்தி தியாகி, இது கடையில் வாங்கப்பட்டதை விட மிகச்சிறந்தது மற்றும் உங்களுக்கு நல்லது என்று கூறினார்.
இயற்கையாகவே பெறப்படும் நெய், மிகவும் ஈரப்பதமாக இருப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது மற்றும் தோலில் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது. இது கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கூட பயன்படுத்த சிறந்தது. சளி, இருமல் போன்றவற்றிலிருந்து விடுபட மார்புப் பகுதியிலும், பாதத்தின் கீழும் பயன்படுத்தவும், என்று கூறினார்.
இருப்பினும், தோல் மருத்துவ நிபுணர் வந்தனா பஞ்சாபி குழந்தைகளுக்கு கற்பூரத்தை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்தார்.
கற்பூரமானது இளம் குழந்தைகளில், குறிப்பாக இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று ஆராய்ச்சி காட்டுகிறது, ஏனெனில் இது மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமம் இருப்பதால் கற்பூரம், அவர்களுக்கு தோல் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது என்று மருத்துவர் பஞ்சாபி கூறினார்.
எனவே, வேறு என்ன உதவ முடியும்?
சளி மற்றும் மூக்கடைப்புக்கு சிறந்த தீர்வு நாசியில் சலைன் ட்ராப்ஸ் (saline drops) ஊற்றலாம், அவர்களுக்கு நிறைய திரவங்களை கொடுங்கள். அவர்களின் குடிநீரிலும் தேன் சேர்க்கலாம் என்று டாக்டர் வந்தனா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“