New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/28/trnQHsZ5ES9MELotnBCo.jpg)
இணையத்தில் பகிரப்படும் ஹோம்மேட் ஷாம்பூக்களை பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை பரிசோதிக்க பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் ஏதோவொரு தீர்வு இருப்பதாகக் கூறி இணையம் நம்மை தினசரி வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த வரிசையில் வீட்டில் தயாரிக்கப்படும் ஹோம்மேட் ஷாம்பூக்கள் இதில் புதிய வரவாக அமைந்துள்ளன. கொண்டை கடலை மாவு அல்லது கடலை மாவு, தேன், தேங்காய் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து ஹோம்மேட் ஷம்பூ தயாரிக்கலாம் என்று கண்டெண்ட் கிரேயட்டர் சோனியா கௌதம் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: The internet is going gaga over this homemade ‘viral shampoo’; we find out if it really works
இவை உண்மையில் பலன் அளிக்குமா?
எனினும், இத்தகைய பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஷாம்பூ உண்மையில் பலன் அளிக்குமா என்று வல்லுநர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அந்த வகையில் இதற்கான சில தகவல்களை அழகுக் கலை நிபுணரான மருத்துவர் கருணா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். அதன்படி, "இவை இயற்கையாக சில பலன்களை கொடுக்கலாம். ஆனால், இதனை பயன்படுத்துபவரின் தலை முடிக்கு இது பொருத்தமானதாக இருக்குமா என்று உணர வேண்டும்.
தலையில் இருக்கும் அதிகமான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்க கடலை மாவு பயன்படலாம். முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க தேன் பயன்படுகிறது. முடிக்கு தேவையான புரதத்தை தேங்காய் எண்ணெய் அளிக்கிறது. இது முடியை உறுதியாக்க பயன்படுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சில விஷயங்கள் குறித்து மல்ஹோத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, "தலையில் ஏற்கனவே எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் போது அவை கூடுதல் எண்ணெய்யை உருவாக்கும். கடலை மாவு சருமத்தை வறட்சியாக்கும். எனவே, அதனை சமநிலைப்படுத்தும் வகையில் தேன் மற்றும் எண்ணெய் சேர்ப்பது அவசியம்.
இதனை நேரடியாக தலையில் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம். மேலும், இதனை பயன்படுத்தலாமா என்று மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.