ஒழுங்கற்ற தோல் பராமரிப்பு, மன அழுத்தம் மற்றும் சூரிய ஒளி போன்ற பல காரணங்களால் நமது சருமம் பொலிவை இழக்க நேரிடும். சரியான கவனிப்பு இல்லாவிட்டால், சருமம் மந்தமாகவும், தொடுவதற்கு கரடுமுரடானதாகவும் இருக்கும்.
வைட்டமின் சி என்பது தோல் பராமரிப்பு உலகில் அடிக்கடி கேட்கப்படும் வார்த்தை. இது பொதுவாக சீரம்கள், முக எண்ணெய்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்கள் வடிவில் காணப்படுகிறது. இது முகப்பரு வடுக்கள், கறைகள் அனைத்தையும் நீக்கி, உங்கள் முகத்தின் பளபளப்பை மீட்டெடுக்கிறது.
2 பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே வைட்டமின் சி எண்ணெயை தயாரிக்கும் எளிய வழி கீழே உள்ளது.
தேவையான பொருட்கள்
1 - ஆரஞ்சு தோல்
1/2 கப் – வர்ஜின் தேங்காய் எண்ணெய்
முறை
ஆரஞ்சு தோலை அரைக்கவும். இது நன்றாக அரைக்க வேண்டியதில்லை. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும். சிறிது சூடு ஆறியவுடன், ஆரஞ்சு தோல் பொடியை சேர்த்து கிளறவும். கொதிக்க ஆரம்பித்தவுடன், எண்ணெய் லேசாக ஆரஞ்சு நிறமாக மாறுவதை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த கட்டத்தில் தீயை அணைக்கவும். இப்போது ஒரு காற்று புகாத பாட்டிலில் எண்ணெயை வடிகட்டி, குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
நீங்கள் தூங்கச் செல்லும் முன் இந்த எண்ணெயைத் தடவலாம் - மசாஜ் செய்யலாம் அல்லது சீரம் தடவிய பிறகு உங்கள் முகத்தில் தடவலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “