மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனையே மழைக்காலத்தில் எப்படி துணிகளை காய வைப்பது என்பது தான். அதிலும் குறிப்பாக பெட்ஷீட், போர்வை, டோர்மேட் போன்றவற்றை காய வைப்பது கடினம்.
Advertisment
ஆனால் இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம், இந்த எளிமையான டிப்ஸ்களை பின்பற்றினாலே எளிதாக உங்கள் துணிகளை காயவைத்து விடலாம். ட்ரீட்ஸ் அண்ட் விலாக் பை நஷிகா என்ற யூடியூப் சேனலில் இந்த டிப்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு பெட்ஷீட் அல்லது போர்வையை மடித்து காய வைக்காமல், ஒரு முனையை ஒரு ஹேங்கரிலும், மற்றொரு முனையை மற்றொரு ஹேங்கரிலும் முடிச்சு போட்டு வீட்டிற்குள் காயவைத்தால் 2-3 மணி நேரங்களில் காய்ந்துவிடும்.
டோர்மேட்களையும் மடித்து காய வைக்காமல், இரு முனைகளிலும் ஹேங்கருடன் சேர்த்து ஊக்குகளை குத்தி காய வைத்தால் எளிதில் காய்ந்துவிடும்.
இருப்பினும் டோர்மேட், ஜீன்ஸ் போன்றவை காய அதிகம் நேரம் எடுப்பதால், நாற்றம் அடிக்க ஆரம்பிக்கும், இதனை சரிசெய்ய, டோர்மேட் அல்லது ஜீன்ஸை ஒரு பிளாஸ்டிக் கவருக்குள் வைத்து இறுக்கமாக மடித்துவிட வேண்டும். இதனை அப்படியே ப்ரீசரில் 2-4 நேரம் வைத்தால், நாற்றம் அடிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“