தேனில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. சூடான தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறில் தேன் கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும். இந்நிலையில் தேனில் இருப்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஒரு டேபிள் ஸ்பூன் தேன் அல்லது 15 கிராம் தேனில் 65 கலோரிகள் உள்ளது. 17 முதல் 18 கிராம் சுகர் இதில் உள்ளது. தேனில் மிரதுவாக்கும் தன்மை உள்ளது. இந்நிலையில் தேனை முகத்தில் பூசா வேண்டும். அது நமது வரண்ட மற்றும் பொலி விழந்த சருமத்தை சரி செய்யும்.
இருமல் குணப்படுத்தும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமடையும். இதில் உள்ள வீக்கத்திற்கு எதிரான குணங்கள், மூச்சுக்குழல் அழற்சியை குணமாக்கும்.
இந்நிலையில் ஆழமான காயங்களை குணமாக்கவும் தேன் உதவுகிறது. பாலிபினால்ஸ், பிளபாய்ட்ஸ் , வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதய துடிப்பையும் சீராக்குகிறது. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இந்நிலையில் இது மன அழுத்தத்தை சரியாக்குகிறது. நரம்பு மண்டலத்தை, ஆக்ஸிடேஷன் செய்யாமல் இருக்க உதவுகிறது. சிறந்த ஹார் கண்டிஷனராக செயல்படுகிறது. இந்நிலையில் இதை நாம் அதிகம் சாப்பிடும்போது, உடல் எடை அதிகரிக்கும். மேலும் டயபடிஸ் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“