தேன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இது சருமத்திற்கு ஊட்டமளித்து, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தேன் தழும்புகளை குறைக்கும் தன்மை கொண்டது.
இது உங்கள் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசர்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெறவும், இயற்கையாக பளபளப்பாகவும் டீடாக்ஸ் ஃபேஸ் மாஸ்க் இங்கே உள்ளது.
தேவையான பொருட்கள்
½ தேக்கரண்டி – மஞ்சள்தூள்
1 டீஸ்பூன் – வேப்பம்பூ தூள்
1 தேக்கரண்டி – முருங்கை தூள்
1 தேக்கரண்டி – அதிமதுரம்
1 தேக்கரண்டி – மஞ்சட்டி (Majishtha)
3 தேக்கரண்டி – முல்தானி மிட்டி
1 தேக்கரண்டி – தேன்
2-3 தேக்கரண்டி – பால் மற்றும் தண்ணீர்
எப்படி அப்ளை செய்வது?
ஒரு கிண்ணத்தில் அனைத்தையும் கலந்து உங்கள் முகத்தில் சமமாக தடவவும். அதை முழுமையாக உலர விடாதீர்கள். ஏனெனில் இது உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை நீக்குகிறது. எப்போதும், ஃபேஸ்-மாஸ்க் சிறிது, வெடிக்க ஆரம்பித்தவுடன் அதை கழுவ வேண்டும்.
குறிப்பு: இந்த ஃபேஸ் மாஸ்க், 100 சதவீதம் இயற்கையாக இருந்தாலும், எந்தவொரு மூலப்பொருளும் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தவில்லை இல்லை என்பதை உறுதிப்படுத்த முதலில் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“