hotel rasam recipe hotel style rasam : ரசத்திலேயே பருப்பு ரசம் மிகவும் சுவையுடன் இருக்கும். மேலும் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக உள்ளது
Advertisment
வேக வைத்த துவரம் பருப்பு - 3 டீஸ்பூன் தக்காளி - 1 ரசப்பொடி - ஒன்றரை டீஸ்பூன் இடித்த பூண்டு - 3 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் புளி கரைசல் - ஒரு எலுமிச்சை சாறு அளவு பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை மிளகு - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கொத்தமல்லித்தழை எண்ணெய் நெய் உப்பு
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் வேகவைத்த பருப்பை மையாக மசித்துக் கொள்ளவும். தக்காளியை நன்றாக கரைத்துக் கொள்ளவும். வடிகட்டிய புளி கரைசலை தயாராக வைக்கவும். ஒரு பாத்திரத்தில், கரைத்து வைத்த தக்காளியை சேர்த்துக் கொள்ளவும். கூடவே புளி கரைசலையும் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன், ரசப் பொடி, மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். இதனை அடுப்பில் வைத்து பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இந்நிலையில், பருப்பை சேர்த்துக் கொள்ளவும். இடையே, மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து ரசத்துடன் சேர்த்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய், எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். ரசம் ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவினால் கமகமக்கும் பருப்பு ரசம் ரெடி.