hotel style thengai chutney ,thengai chutney : நம்மில் பலருக்கும் ஹோட்டலில் கொடுக்கப்படும் சட்னிகள் என்றால் பிடிக்கும். அதில் குறிப்பாக நிறைய பேருக்கு பிடித்தது எனில், அது தேங்காய் சட்னி தான். நாமும் வீட்டில் தேங்காய் சட்னியை அரைத்து, இட்லி, தோசைக்கு சாப்பிட்டதுண்டு. ஆனால் வீட்டில் செய்யப்படும் தேங்காய் சட்னியோ, ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி போல் இருக்காது.
Advertisment
உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா?
தேங்காய் - 1 கப் (துருவியது) * பச்சை மிளகாய் - 1 * இஞ்சி - 1 சிறிய துண்டு * சீரகம் - ஒரு சிட்டிகை * உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... * கடுகு - 1 டீஸ்பூன் * உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிது * எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
Advertisment
Advertisement
செய்முறை: * முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். * பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”