மொறு மொறு உளுந்து வடை, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 ½ கப் உளுந்து
1 ½ டேபிள் ஸ்பூன் பச்சரிசி
அரை ஸ்பூன் இஞ்சி நறுக்கியது
அரை ஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் மிளகு இடித்தது
2 ஸ்பூன் தேங்காய் நறுக்கியது
1 கொத்து கருவேப்பில்லை
2 ஸ்பூன் பச்சை மிளகாய் நறுக்கியது
உப்பு
செய்முறை: உளுந்தில், பச்சரிசி சேர்த்து தேய்த்து கழுவ வேண்டும். இப்படி இரண்டு முறை தேய்த்து அலச வேண்டும். தொடர்ந்து இதில் தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இதை குளிரான தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். அரிசி நன்றாக அரைபடாமல் அரைத்துகொள்ளவும். அரைத்த மாவை வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றவும். இதை நன்றாக பீட்டர் வைத்து அடித்துகொள்ளவும். தொடர்ந்து இதில் தேங்காய் நறுக்கியது, மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து கிளரவும். எண்ணெய்யில் முதலில் பாதி வேகும் வரை பொறிக்கவும். தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறித்து எடுக்கவும்.