காய்ந்து போன எலுமிச்சையை சுடு தண்ணீரில் போட்டு இப்படி யூஸ் பண்ணுங்க… கறைகள் காணாமல் போகும்!
உங்கள் வீட்டில் எலுமிச்சை பழம் அல்லது எலுமிச்சை பழத்தோல் காய்ந்து போய் விட்டால் அதனை தூக்கிப் போட வேண்டாம். அதை கொண்டு சில பயனுள்ள காரியங்களை நம்மால் சுலபமாக செய்ய முடியும்.
உங்கள் வீட்டில் எலுமிச்சை பழம் அல்லது எலுமிச்சை பழத்தோல் காய்ந்து போய் விட்டால் அதனை தூக்கிப் போட வேண்டாம். அதை கொண்டு சில பயனுள்ள காரியங்களை நம்மால் சுலபமாக செய்ய முடியும்.
எந்தவொரு பொருளையும் குப்பையில் வீசுவதற்கு முன்பாக நன்கு யோசிக்க வேண்டும். ஏனெனில், அந்தப் பொருளில் இருந்து நமக்கு தேவையான விஷயங்களை செய்ய முடியுமா என்று ஆராய்ந்து பார்த்தல் அவசியம். அதன்படி, காய்ந்து போன எலுமிச்சை பழங்களை வைத்து ஒரு சூப்பர் டிப்ஸை பார்க்கலாம்.
Advertisment
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் காய்ந்து போன எலுமிச்சை பழம் அல்லது எலுமிச்சை பழத்தோல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இப்படி செய்தால் எலுமிச்சை பழம் சற்று பெரிதாகும்.
இதையடுத்து அடுப்பை ஆஃப் செய்து விட்டு எலுமிச்சை பழத்தை மட்டும் வெளியே எடுத்து அதனை இரண்டாக வெட்டி, மிக்ஸியில் போட்டு பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இந்தப் பசையை, ஏற்கனவே எலுமிச்சை பழங்கள் கொதிக்க வைத்த தண்ணீருடன் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த தண்ணீரை வடிகட்டி அத்துடன் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு ஸ்பூன் ஷம்பூ சேர்த்து கலக்க வேண்டும். இறுதியக இந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். இந்த தண்ணீரை பல வேலைகளுக்கு நம்மால் பயன்படுத்த முடியும்.
Advertisment
Advertisements
உதாரணத்திற்கு வாஷிங் மெஷின் க்ளீன் செய்ய சில பௌடர் வாங்க வேண்டியது இருக்கும். ஆனால், அதற்கு பதிலாக நாம் தயாரித்து வைத்த தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யலாம். இதேபோல், துணிகளில் பேனா கறை பட்டால், அவற்றை அகற்றவும் இதனை பயன்படுத்தலாம்.
இது தவிர கழிப்பறையை சுத்தம் செய்யவும் இந்த தண்ணீர் பயன்படும். மேலும், அடிபிடித்த பாத்திரங்களை கழுவவும் இது பயன்படும். இப்படி பல விஷயங்களுக்கு இந்த எலுமிச்சை தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.