/indian-express-tamil/media/media_files/2025/08/04/wedding-photography-2025-08-04-18-49-57.jpg)
நவீன திருமண ஆல்பங்களில் புரட்சி: உணர்வுகள் பேசும் 'சினிமாட்டிக்' வெட்டிங் போட்டோகிராஃபி!
திருமண நிகழ்வுகள் போட்டோஷூட் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. ஒரு காலத்தில் இறுக்கமான போஸ்கள், செயற்கைப் புன்னகைகள் ஒரே மாதிரியான ஆல்பங்கள் அனைத்தும் இன்று பழைய கதையாகிவிட்டன. தற்போது, உணர்வு, அசைவு மனநிலை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, திரைப்படம்போல உயிரோட்டமான காட்சிகளை உருவாக்கும் 'சினிமாட்டிக்' திருமண புகைப்படம் எடுக்கும் முறை (Cinematic Wedding Photography) பிரபலமடைந்து வருகிறது.
இது வெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்வது மட்டுமல்ல; ஒரு காதல் பயணத்தை, அதன் ஆழமான உணர்வுகளுடன் காட்சிப்படுத்துவதாகும். காதல் படங்களில் வருவது போன்ற பரந்த காட்சிகள், அல்லது ஒரு காதல் கதையின் தருணங்கள் போல் ஒளிரும் நெருக்கமான, இயல்பான பிரேம்கள் என, இந்த அணுகுமுறை சரியான தன்மையைக் காட்டிலும் நம்பகத்தன்மைக்கு அதிக முக்கியத்துவமளிக்கிறது. ஆனால், இந்த மாற்றத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறது, நிஜ வாழ்க்கைத் தருணங்களைச் சினிமாட்டிக் மாயமாக மாற்ற என்ன தேவை?
'சினிமாட்டிக்' போட்டோகிராபி கலையின் தனித்துவம் என்ன?
"பாரம்பரிய திருமணப் புகைப்படக் கலையானது பெரும்பாலும் போஸ் கொடுக்கப்பட்ட படங்களுக்கும், சடங்கு ரீதியான ஆவணங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும். ஆனால், சினிமாட்டிக் புகைப்படம் என்பது இயல்பான தருணங்கள், காலத்தால் அழியாத ஒரு காட்சித் கதையை உருவாக்குவதாகும்," என்கிறார் திருமணப் புகைப்படக் கலைஞர் கேதன் ஷர்மா. "இது கலைத்திறன், அசைவு, மற்றும் உணர்வு ஆகியவற்றை இணைத்து, பார்வையாளர்களை அந்த கொண்டாட்டத்தின் மையத்திற்கே அழைத்துச் செல்லும் சினிமா அனுபவத்தை வழங்குகிறது."
கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சௌரசிஷ் தத்தா, "இந்தியத் திருமணங்களில் மணமக்களுக்கு இப்போதுதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காட்சி கலைஞர்களாகிய எங்களுக்கு, வார்த்தைகளுக்குப் பதிலாகப் படங்கள் மூலம் அவர்களின் பயணக் கதையைப் பகிர இது வாய்ப்பு. நாங்கள் அவர்களின் தனிப்பட்ட கதைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, எங்கள் லென்ஸ்கள் மூலம் அவற்றைப் புத்துருவாக்கம் செய்கிறோம். இது திரைப்படங்களுக்கு இணையான ஒரு கதை சொல்லும் விளைவை உருவாக்குகிறது."
அன்ஸ்கிரிப்டட் கோ நிறுவனத்தைச் சேர்ந்த ஜதின் & யஷிதா, "சினிமாட்டிக் அணுகுமுறை அன்றைய தினத்தின் நம்பகத்தன்மையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது நெருக்கத்தையும் ஏங்கலையும் தூண்டும், உங்களை அதே உணர்விற்குத் திரும்பி அழைத்துச் செல்லும் காட்சிகளை உருவாக்குவதாகும். அதுதான் உண்மையான வித்தியாசம்."
போட்டோ அல்லது வீடியோ 'சினிமாட்டிக்' தோற்றத்தைப் பெறுவது எப்படி?
ஷர்மாவின் கூற்றுப்படி, ஒளி அமைப்பு, நுட்பமான கலவை, post-production கலைத்திறன் ஆகியவற்றின் கலவையாகும். "மென்மையான, ஒளி அல்லது வலுவான பின்னொளி போன்ற வெளிச்சம் உணர்வுகளைத் தூண்டும். பிரேமிங் போன்ற கலவை நுட்பங்கள் பார்வையை வழிநடத்தும். கலர் கிரேடிங் மூலம் செய்யப்படும் சினிமாட்டிக் எடிட்டிங் காட்சிகளுக்குச் செழுமையையும் சேர்க்கும். அசைவு, மெதுவான காட்சிப் பதிவுகள் (slow-motion shots), மற்றும் கோணங்கள் அனைத்தும் காட்சிகளைத் தத்ரூபமாக உணர வைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன," என்று அவர் விவரித்தார்.
ஆனால், ஜதின்& யஷிதாவைப் பொறுத்தவரை, இதுவெறும் நுட்பத்தைப் பற்றியது மட்டுமல்ல. "தொடர்புதான் எல்லாமே. ஒவ்வொரு தம்பதியின் ஆற்றலையும் புரிந்துகொண்டு, இயல்பான தருணங்களை படம்பிடிக்க நாங்கள் பின்னணியில் முயற்சிக்கிறோம். தம்பதி உண்மையாகவே மகிழும்போதே சிறந்த காட்சிகள் பதிவாகின்றன. நாங்கள் எப்போதும் அவர்களைக் கொண்டாட்டத்தை அனுபவிக்கச் சொல்கிறோம்," என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
தம்பதி புகைப்படக் கலைஞர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்களா?
"நிச்சயமாக," என்கிறார் தத்தா. "திருமணப் புகைப்படக் கலை புதுமைக்கும் அசல் தன்மைக்கும் மையமாக மாறிவிட்டது. பெரும்பாலான தம்பதியினர் தாங்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதில் தெளிவான யோசனையுடன் எங்களிடம் வருகிறார்கள், அது அவர்கள் ஏற்கனவே பார்த்த ஒன்றாக இருக்காது. அவர்கள் எப்போதும் தனித்துவத்தைத் தேடுகிறார்கள். இது எங்களை எப்போதும் புதிய விஷயங்களைக் கற்கத் தூண்டுகிறது."
யஷிதா கூறுகையில், "Gen Z தம்பதிகளாகிய நாங்கள், திருமண நாளை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றும், இயல்பான, நெருக்கமான, மற்றும் காலத்தால் அழியாத தருணங்களைப் படம்பிடிக்க வேண்டும் என்றும் கூறும் மணமக்களுடன் ஆழமாக ஒத்துப் போகிறோம். இதுதான் சினிமாட்டிக் அணுகுமுறை. மேலும் மேலும் தம்பதியினர் இதை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள், இதை நாங்கள் விரும்புகிறோம்."
சினிமாட்டிக் திருமணங்களை படம்பிடிப்பதில் உள்ள சவால்கள்:
கேதன் ஷர்மாவின் கூற்றுப்படி, "திருமணங்களில் சினிமாட்டிக் அணுகுமுறையுடன் படம்பிடிப்பது, கணிக்க முடியாத வெளிச்சம், வேகமாக நிகழும் தருணங்கள், மற்றும் அமைப்புக்குக் குறைந்த நேரம் போன்ற சவால்களை முன்வைக்கிறது. எல்லாம் நேரலையாக நடப்பதால், எதையும் மீண்டும் செய்யச் சொல்ல முடியாது." தத்தாவைப் பொறுத்தவரை, திட்டத்தின் தனித்துவத்தைப் பொறுத்து சவால்கள் மாறும். "உதாரணமாக, தூரத்தில் உள்ள இடங்களுக்குப் பயணிக்கும்போது மணமக்களுக்கு முக்கியமான ஏதாவது ஒரு பொருள் தவறாக வைக்கப்படலாம்; இது ஒரு சவாலாக மாறலாம்," என்று அவர் கூறினார்.
நம்பகத்தன்மையையும் சினிமாட்டிக் திறமையையும் சமநிலைப்படுத்துவது மற்றொரு சவால் என்று ஜதின் மற்றும் யஷிதா குறிப்பிட்டனர். "சரியான ஷாட்டைப் படம்பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட எளிது, ஆனால் நாங்கள் ஒருவரின் உண்மையான கதையை சொல்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கலைத்திறனுடன் இயல்பான தருணங்களை மேம்படுத்துவதே முக்கியம். அன்றைய நாளை நாடகம் போல உணர வைக்கக் கூடாது. சரியாகச் செய்யும்போது, இந்தச் சவால்கள் ஆழமான, அர்த்தமுள்ள கதை சொல்லும் அனுபவத்திற்கு வழிவகுத்து, நீடித்த நினைவுகளை உருவாக்குகின்றன," என்று அவர்கள் கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.