Advertisment

உங்க குடலின் ஆரோக்கியம் எப்படி இருக்கு? கருத்தரிக்கும் ஆற்றலை இது பாதிக்குமா?

நமது குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. குடலில் நுண்ணுயிரிகள் இருப்பதால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சத்துகளை எடுத்துகொள்ளவும், ஹார்மோன்களை சீராக்கவும் உதவுகிறது. இந்நிலையில் இது குழந்தை உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நமது குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. குடலில் நுண்ணுயிரிகள் இருப்பதால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சத்துகளை எடுத்துகொள்ளவும், ஹார்மோன்களை சீராக்கவும் உதவுகிறது. இந்நிலையில் இது குழந்தை உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

Advertisment

நல்ல குடல் ஆரோக்கியம் சரியாக இருப்பதால் கருத்தரிக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. சரியான முறையில் குடலில் உள்ள நுண்ணியிரிகள் இல்லாமல் இருப்பதை டிஸ்பயோசிஸ் ( dysbiosis) என்று அழைகின்றனர். இது இனபெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது வீக்கத்தை ஏற்படுத்தும். மாதவிடாய் சுழற்சியின்போது,  சுரக்கும் ஹார்மோன்களை பாதிக்கும். கரு உண்டாவதற்கு காரணமான ஹார்மோன்களும் பாதிக்கப்படும்.

குடலில் உள்ள நுண்ணுயிரிகள்தான், போலேட் சத்தை உடல் எடுத்துகொள்ள உதவுகிறது. இவை குழந்தை கருவில் இருக்கும்போது வளர உதவுகிறது.

குடலில் உள்ள பேக்டீரியாவை வீக்கத்திற்கு காரணமாக அமையலாம். இதனால் கரு முட்டைகள் மற்றும் கரு வளர்ச்சியை பாதிக்கும்.

பெண்கள் பிறப்பு உறுப்பின் ஆரோக்கியத்திற்கும், குடலின் பேக்டீரியாவிற்கும் தொடர்பு உள்ளது. குறிப்பாக லாக்டோ பேசிலஸ் வகை பேக்டீரியா, பிறப்பு உறுப்பின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். பிறப்பு உறுப்பில் த்ரஷ் (  thrush) எனப்படும்  தொற்று ஏற்பட்டால் நமது குடலை நாம் கவனிக்க வேண்டும் என்று அர்த்தம்

இந்நிலையில் இந்த அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால் நீங்கள் உங்கள் குடலை நல்ல பார்த்துகொள்ள வேண்டும் என்று அர்த்தம்

வயிற்று உப்புதல், அடிக்கடி வாயுத் தொல்லை ஏற்படுவது. அடிக்கடி வயிற்றுபோக்கு , மலச்சிக்கல் ஏற்படுவது. குமட்டல், வாந்தி. வெளியேறும் மலம் பிசுபிசுப்பாக இருப்பது. சுறுநீர் பாதையில் தொற்று அடிக்கடி ஏற்படுவது. பி.சி.ஓ.எஸ் இருப்பது. உடல் எடை குறைக்க முடியாமல் தவிப்பது. அல்லது அதிக பருமனாக இருப்பது. இப்படி இருந்தால் நீங்கள் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும்.

Read in English 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment