How is sleep related to memory Tamil News : தூக்கத்தைப் பற்றியும் தூக்கத்திற்கும் நினைவகத்திற்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் அறிவியல் ஆசிரியர் ஆழமான விளக்கத்தை இங்கே கொடுத்திருக்கிறார்.
இன்று நாம் வாழும் உலகில், தூக்கமின்மை கடின உழைப்பின் ஒரு அடையாளமாகவும், வெற்றியை அடைவதற்கு இன்றியமையாத பொருளாகவும் கருதப்படுகிறது. மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் குறைந்த நேரத் தூக்கத்தில் பெருமைப்படுவதை நாம் அடிக்கடி காண்கிறோம். அதை ஒரு கெளரவ அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு சமூகமாக நாம் தூக்கமின்மைக்கு மிக உயர்ந்த சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டோம். ஆனால் இது எவ்வளவு ஆபத்தானது என்பதை மட்டும் ஏனோ புறக்கணிக்கிறோம்.
தூக்கம் நம்முடைய மன மற்றும் உடல் மீட்பு காலத்தை உருவாக்கி உற்பத்தி, ஆற்றல் மற்றும் மகிழ்ச்சியான வேலை நாளுக்கு வழிவகுக்கிறது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 2019-ல் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி தூக்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளப் பெரிதும் உதவியது. அந்த ஆராய்ச்சியில், வழக்கத்தைவிட நன்றாகத் தூங்கி, தேர்வுக்கும் முதல் நாள் விழிப்பதைத் தவிர்த்த மாணவர்கள், ஒழுங்கற்ற தூக்கத்தைக் கொண்டவர்களைவிட நல்ல மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்தது.
நினைவாற்றல் உருவாக்கம் மற்றும் கற்றல் ஆகியவை முதன்மையாக மூன்று-படி செயல்முறை. அதாவது, தகவல் பெறுதல், ஒருங்கிணைத்தல், திரும்பப்பெறுதல் மற்றும் தேவைக்கேற்ப பயன்பாடு. நாம் விழித்திருக்கும்போது தகவல்களைப் பெறுதல், உபயோகித்தல் மற்றும் மீட்டெடுப்பது ஆகிய செயல்பாடுகள் நடக்கும்போது, அறிவின் ஒருங்கிணைப்பு, வலுப்படுத்துதல் மற்றும் புதிய புரிதலை முந்தைய தரவுகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவை நாம் தூங்கும்போது முதன்மையாக நிகழ்கின்றன.
நாம் தகவலைப் பெறும்போது, முதன்மையாக ஐந்து உணர்வு உறுப்புகளின் உதவியுடன் உணர்ச்சி நினைவகம் உருவாகிறது. இந்த கற்றல், நரம்பு மண்டலத்தால் செயலாக்கப்பட்டுக் குறுகிய கால நினைவகத்திற்கு வைக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வரையறுக்கப்பட்ட சேமிப்பு திறன் (ரேம்) உடன் வருவது போல, நமது குறுகிய கால நினைவகமும் வருகிறது. எனவே, முக்கியமான மற்றும் பொருத்தமான நினைவுகள் நீண்ட கால நினைவக தளத்திற்குத் தொடர்ந்து மாற்றப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, வண்டியின் வருகைக்காகக் காத்திருக்கும்போது அதன் எண்ணை நாம் நினைவில் கொள்கிறோம். ஆனால், குறுகிய கால நினைவகத்தில் தகவல் இருப்பதால் சிறிது நேரத்திலேயே அதை மறந்துவிடுவோம். அதுவே, ஓர் முக்கியமான தகவல் நீண்ட காலத்திற்கு நகர்த்தப்பட்டதால், நம்முடைய மொபைல் எண்ணைப் போல நாம் அதனை எளிதில் மறக்கமாட்டோம். நினைவகம், இது எல்லையற்ற சேமிப்பு திறனைக் கொண்டிருக்கலாம்.
மேலும், தூக்கம் மற்றும் நினைவகம் இடையே சில ஒருமித்த கருத்து உள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தூக்கத்தின் ஒவ்வொரு கட்டமும் நினைவக உருவாக்கத்தில் பங்கு வகிக்கிறது என்று கூறுகிறார்கள்.
தூக்கம் உடலுக்கு ஒரு ஓய்வு நேரமாக இருந்தாலும், REM அல்லது விரைவான கண் அசைவு தூக்கம் மற்றும் REM அல்லாத தூக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய தூக்க சுழற்சிகளைக் கடந்து செல்லும் போது மூளை பிஸியாக உள்ளது. நாம் தூங்கும்போது, முதலில் REM அல்லாத சுழற்சியில் நுழைகிறோம். அதில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் கட்டத்தில் நாம் தூக்கத்திற்கு செல்கிறோம், இரண்டாம் நிலை ஆழ்ந்த தூக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது மற்றும் மூன்றாம் நிலை மிகவும் ஆழ்ந்த தூக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது. நீங்கள் எப்போதாவது திடீரென்று எழுந்திருக்கிறீர்களா? சிறிது நேரம் பயமாகவும் குழப்பமாகவும் உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் மூன்றாம் நிலை தூக்கத்திலிருந்து நீங்கள் விழித்திருக்க வேண்டும். பின்னர் முக்கியமான REM தூக்கம் வருகிறது. ஒவ்வொரு தூக்க சுழற்சியும் சுமார் 90-120 நிமிடங்கள் எடுக்கும். மற்றும் REM தூக்கம் சுமார் 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இந்த காலம் அடுத்தடுத்த தூக்க சுழற்சிகளின் போது ஒரு மணி நேரம் வரை செல்லும்.
நாம் தூங்கும்போது, REM அல்லாத தூக்கத்தின் நிலை இரண்டு மற்றும் மூன்றில் உள்ள மெதுவான மூளை அலைகள், தற்காலிக சேமிப்பு தளத்திலிருந்து நிரந்தர சேமிப்பு இடங்களான ஹிப்போகாம்பஸிற்கு நினைவுகளை மாற்றும். மெதுவான மூளை அலைகள், அறிவிப்பு அல்லது உண்மை அடிப்படையிலான நினைவகத்தை ஒருங்கிணைக்க உதவுகின்றன. இது சுயசரிதை மற்றும் பொதுவான அறிவு என்று அழைக்கப்படுவதை நினைவில் கொள்ள உதவுகிறது. REM தூக்கத்தின் போது, முக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு உதவும் நியூரான் இணைப்புகள் பலப்படுத்தப்படுகின்றன. REM தூக்கம் செயல்முறை நினைவகத்தை ஒருங்கிணைப்பதற்கும் முக்கியமானது. இது தன்னியக்க பைலட்டில் பணிகளைச் செய்ய உதவுகிறது. தூக்கத்தின் இலகுவான கட்டங்கள் சிமெண்ட் மோட்டார் கற்றலுக்கு உதவுகின்றன. அதாவது, நாம் பல் துலக்குவது போன்ற தசை ஒருங்கிணைப்பு செயல்பாடுகள் அடங்கும்.
நினைவகம் மற்றும் கற்றலுக்கு தூக்கம் இன்றியமையாதது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், அதன் சரியான பங்கு என்ன என்று பல விவாதங்களும் கோட்பாடுகளும் உள்ளன. எவ்வாறாயினும், போதுமான தூக்கம் நம் கற்றல் திறனை நிரப்புகிறது. மேலும், நினைவாற்றல், தகவலைத் தக்கவைத்தல் மற்றும் தகவலை நினைவுபடுத்துதல், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் நமது படைப்பாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது. தூக்கமின்மை ஒருவரை வெறித்தனமாக்குகிறத. அதுமட்டுமின்றி நீரிழிவு, இதயப் பிரச்சினைகள், கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற வாழ்க்கை முறை வியாதிகளுக்கும், நினைவாற்றலுக்கும் கற்றலுக்கும் கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பகலில் சிறிது நேரம் தூங்கினாலும், இரவில் 10 மணி நேரம் வரை தூங்கினார். எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் போன்ற புத்திசாலிகளும் ஆறு முதல் ஏழு மணிநேர தூக்கத்தை உறுதி செய்கின்றனர். எனவே நாம் நன்றாகத் தூங்கும்போது, நம் திறனை உணரத் தயாராகி வருகிறோம். ஆரோக்கியமான தூக்கப் பழக்கத்தை ஊக்குவிப்பது அவசியம். புகைபிடித்தல் மற்றும் ஜங்க் உணவின் தீய விளைவுகளை நாம் பரப்புவதைப் போலவே, தூக்கமின்மை ஒரு உடல் மற்றும் மனநலப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது மற்றும் தீவிரமான தூக்கக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது அவசியம்.
உணவு மற்றும் உடற்பயிற்சியைத் தவிரத் தூக்கம், ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் ஒரு முப்பரிமாணத்தை உருவாக்குவதில் ஆச்சரியமில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil