உடல் எடையைக் குறைப்பது எப்படி? அதிமதுரத்தின் பயன்கள்!

உடல் எடையை குறைக்க வேண்டும் நீங்கள் நினைத்தால் இந்த டிப்ஸ் உங்களுக்கானதுதான்!

ராஜலட்சுமி சிவலிங்கம்

உடல் எடையை எவ்வாறு குறைப்பது என தெரியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். உடல் எடையை குறைக்க வேண்டும் நீங்கள் நினைத்தால் இந்த டிப்ஸ் உங்களுக்கானதுதான்!

 • காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் பாதி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரைத் தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
 • உணவில் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து அருந்தலாம்.
 • நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் இஞ்சிச் சாறு கலந்து தினமும் காலையில் குடித்தால் கொழுப்பு குறையும்.
 • பாலில் இஞ்சி சாறு கலந்து சாப்பிட்டால் உடம்பு இளைக்கும்.
 • சிறிது சீரகத்தை மஞ்சள் வாழைப்பழத்துடன் சேர்த்துச் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
 • அருகம்புல்லை சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பை குறையும்.
 • இரண்டு தேக்கரண்டி முருங்கை இலைச்சாற்றை தினசரி காலையிலும் மாலையில் வேளைகளில் சாப்பிட்டால் எடை குறையும்.
 • கொள்ளுப் பயிரை நன்றாக சுத்தம் செய்து ரசம் வைத்து மூன்று வேளை குடித்தால் உடல் எடை குறையும்.
 • தேனுடன் ஓமத்தை கருக வறுத்துப் பொடு செய்து தினமும் சாப்பிட எடை குறையும். பாதாம் பொடியுடன் சிறிது தேன் கலந்து காலை உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.
 • மோருடன் கேரட்டை அரைத்து தினமும் குடித்தால் உடல் இளைக்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக் காய் இவற்றைப் பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.

அதிமதுரம் (Liquorice)

அதிமதுரத்தின்  மருத்துவ குணங்கள் உலகின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இது சர்வதேச மருத்துவ மூலிகை என்று அழைக்கப்படுகிறது. அதிமதுரம் என்னென்ன நோய்களை குணப்படுத்தும்?

 • மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே பல நோய்களைத் தீர்க்கும் திறன் கொண்டது இது. வைரஸ் கிருமிகளை அழிக்கும், செரிமானத்திற்கும் மலச்சிக்கலை நீக்குவதற்கும் உகந்தது. சிறுநீர் கல்லடைப்பை நீக்கவும் பயன்படும்.
 • இருமல் நீங்க, அதிகமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சமஅளவில் எடுத்து இளஞ்சிவப்பாய் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டால் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
 • அதிமதுரப் பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டால், தொண்டைகட்டு, இருமல், சளி குணமாகும்.
 • மஞ்சள் காமாலை நோய் நீங்க அதிமதுரம், சங்கம் வேர்ப்படை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சை பழச்சாற்றில் அரைத்து சிறிய அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக்கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.
 • சோம்புப் பொடி, அதிமதுரப் பொடி தலா 5 கிராம் அளவில் படுக்கப்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் சூடு தணிந்து உடல் சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
  அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாது. தலை முடி உதிராது.
×Close
×Close