ஒரு வயதுவந்த ஆணின் உடலில், விந்தணுக்களின் எண்ணிக்கை என்பது சுமார் 15 மில்லியன் முதல் 200 மில்லியன் ஆகும். அதாவது ஒரு மில்லி லிட்டர் விந்துவில் இத்தனை உயிர் அணுக்கள் உள்ளன.
எனினும் சிலருக்கு இந்த விந்தணு எண்ணிக்கையில் குறைபாடுகள் இருக்கலாம். இது அவரவர்களின் உடல் நிலையை பொறுத்தது. அந்த வகையில், இந்த எண்ணிக்கை 15 மில்லியனுக்கும் குறைவாக இருந்தால்,சில உணவுப் பழக்க வழக்கங்கள் முறையில் நிவர்த்தி செய்துக்கொள்ளலாம்.
அந்த வகையில் ஒரு ஆணின் விந்தணுக்களை அதிகரிக்க அக்ரூட் பருப்புகள், வாழைப் பழம், நெல்லிக்காய், பூண்டு, கீரை உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கிடையில், கோவிட் பெருந்தொற்று காலத்துக்கு பின்பு ஆண்களின் விந்தணுக்கள் குறைந்து காணப்படுவதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
ஆகவே ஆண்கள் மது, புகையிலை உள்ளி்டட உணவுகளை தவிர்த்து சத்தான உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வது நல்லது.
மேலும், விந்தணுக்களுக்கு என்று சில பிரத்யேக குணநலன்கள் உள்ளன. அந்த வகையில் ஒரு ஆணின் விந்து பை தன் வாழ்நாளில் 12 லட்சம் கோடி விந்தணுக்களை உற்பத்தி செய்யும்.
அதேபோல் விந்தணுவில் ஆண், பெண் உள்ளன. இதில் ஆண் விந்தணுக்கள் வேகமாகவும், பெண் விந்தணுக்கள் சற்று வலிமையாகவும் காணப்படும்.
மேலும் விந்தணு வெளியில் 2 நாள்கள் உயிர் வாழ்ந்தாலும், பெண் உடலுக்குள் செல்லும்போது அவைகளால் 5 நாள்கள் உயிர் வாழ முடியும்.
இதுமட்டுமின்றி உடற்பயிற்சி இன்றி காணப்படும் ஆண்களை விட உடற்பயிற்சியில் ஈடுபடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தி 70 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து காணப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/