நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட் எவ்வளவு எடுத்துகொள்ள வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் எடுத்துகொள்வதுதான், உடலில் அதிக சக்தி கொடுக்கும்.
இந்நிலையில் ஒருவர் எவ்வளவு கார்போஹைட்ரேட்டை எடுத்துகொள்ள வேண்டும் என்பது வயது, பாலினம், உடல் ஆரோக்கியத்தை பொருத்து மாறுபடும். நீங்கள் எடுத்துகொள்ளும் உணவில் 45 முதல் 65% அளவு கார்போஹைட்ரேட் இருக்க வேண்டும்.
மேலும் நாம் எடுத்துகொள்ளும் கார்போஹைட்ரேட் தரத்தை நான் அறிந்திருக்க வேண்டும். அதிகம் பதப்படுத்தப்படாத, சலிக்காமல் இருக்கும் கார்போஹைட்ரேட் வகையை நாம் எடுத்துகொள்ள வேண்டும்.
அதிக அளவில் நாம் கார்போஹைட்ரேட், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை எடுத்துகொண்டால், உடல் எடை அதிகமாகும். இதனால் டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும். அதிகம் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டை நாம் எடுத்துகொள்ளும்போது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, கொலஸ்ட்ரால் மற்றும் இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும்.
நாம் அதிகமாக கார்போஹைட்ரேட் எடுத்துகொண்டால், இன்சுலினை உடல் எடுத்துகொள்ளும் விதத்தை இது பாதுக்கும். இதனால் டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படலாம்.
இந்நிலையில் சிலருக்கு ஜீரண பிரச்சனைகள் ஏற்படும். வயிற்று உப்புதல், மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படலாம். சிலருக்கு பற்களின் ஈரில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“