சத்யாஸ்காவின் இணை நிறுவனர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குநரான நவ்யா கன்னாவின் கூற்றுப்படி, படுக்கை விரிப்புகளை ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். இருப்பினும், செல்லப்பிராணிகளால் ஒவ்வாமை உள்ளவர்கள், அதிக வியர்வை வருபவர்களுக்கு வாரந்தோறும் துவைப்பது நல்லது என்று கூறினார்.
கூந்தலில் உள்ள எண்ணெய், காற்று தூசி, அழுக்கு, நுண்ணுயிரிகள் விரைவில் சேர்வதால் உங்கள் பெட்ஷீட்டை அடிக்கடி சுத்தம் செய்வது சுகாதாரம் மற்றும் நல்ல உறக்கத்திற்கு உதவும்.
கன்னா மேலும் கூறுகையில், “துவைப்பது வியர்வை, இறந்த சரும செல்கள், தூசிப் பூச்சிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற ஒவ்வாமைகளை நீக்குகிறது. இதை துவைக்காமல் விட்டால் இந்த பொருட்கள் தோல் எரிச்சல், முகப்பரு, ஒவ்வாமை மற்றும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றார்.
பெட்ஷீட் பராமரிப்பு டிப்ஸ்
சூடு நீரில் துவைக்கவும்: பெட்ஷீட் மெட்டீரியல் பொருத்து உங்கள் பெட்ஷீட்டை சூடான நீரில் துவைக்கலாம். வெதுவெதுப்பான நீரில் போடுவது பாக்டீரியாவைக் கொல்ல உதவும்.
அதிகப்படியான சோப்பு மற்றும் ஆயிலை தவிர்க்கவும்: அதிக சோப்பு அல்லது ஆயில் பயன்படுத்துவது காலப்போக்கில் பெட்ஷீட் உறிஞ்சுதல் தன்மையை குறைக்கும்.
நன்கு உலர்த்துதல்: பூச்சு மற்றும் பூஞ்சை காளான் வளர்ச்சியைத் தடுக்க, பயன்படுத்துவதற்கு முன், பெட்ஷீட் முற்றிலும் உலர்ந்திருப்பதை உறுதிப்படுத்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“