அனைவரின் வீடுகளிலும் தினமும் பயன்படுத்தப்படுகிற உணவுப் பொருள் என்றால் அது பால்தான். அப்படி பால் காய்ச்சும்போது, அடிக்கடி பல நேரங்களில் திடீரென பால் கொதித்து பொங்கி கீழே ஊற்றி விடும் அனுபவம் ஏற்பட்டிருக்கும். அதனால், பால் கொதித்து பொங்காமல் இருக்க உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ…
வீடுகளில் பால் காய்ச்சும்போது நாம் சற்று எதிர்பார்க்காத நேரத்தில் பால் கொதித்து திடீரென பொங்கி கீழே ஊற்றிவிடும் நிகழ்வு தினமும் நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். இதனால், பால் வீணாவதுடன், ஸ்டவ் மற்றும் சமையல் கட்டை அசுத்தமாகவும் ஆக்கிவிடும். அதனால், பலரும் பால் கொதித்து பொங்கி கீழே ஊற்றாமல் இருக்க மிகவும் கவனமாக பால் காய்ச்சுவோம். ஆனாலும், எப்படியோ இந்த பால் கொதித்து பொங்கி கீழே ஊற்றிவிடும்.
இப்படி, அடிக்கடி பால் கொதித்து பொங்கி கீழே ஊற்றுகிறதா, உங்களுக்காகவே பால் கொதித்து பொங்கி கீழே ஊற்றாமல் இருக்க நந்திதா ஐயர் ஒரு சூப்பர் டிப்ஸ் கொடுத்திருக்கிறார்…
பால் காய்ச்சும்போது, பால் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைக்க வேண்டும். பால் பாத்திரத்தின் மேல் மரக் கரண்டியை வைத்திருப்பதால் பால் கொதிக்காமல் தடுக்கும்.
பால் பாத்திரத்தின் மேல் ஏன் மரக் கரண்டியை வைக்க வேண்டும் என்றால், மரக்கரண்டி வெப்பத்தைத் தடுக்க உதவுகிறது. பால் பொங்கும்போது அதை தடுத்து கீழே உள்ள அழுத்தத்தைக் குறைத்து பால் கொதித்து பொங்கி வழிவதைத் தடுக்கிறது.
அட! இந்த டிப்ஸ் புதுசா இருக்கு இல்லையா? இனிமேல் நீங்களும் பால் காய்ச்சும்போது, பால் கொதித்து பொங்கி கீழே ஊற்றாமல் காய்ச்சலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"