தண்ணீர் அருந்துவது குறித்து ஆயுர்வேத மருத்துவர் டிசா பாஸ்வர் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் நேயர்களிடம் கலந்துரையாடினர். உரையாடலில், கேட்கப்பட்ட முக்கிய சில கேள்விகள் இங்கே:
தண்ணீர் குடிக்க சிறந்த நேரம் எப்போது?
* நீங்கள் தாகமாக இருக்கும் போதெல்லாம். “
ஆயுர்வேதம் முறை காலை எழுந்தவுடன் முதலில் தண்ணீரை அருந்த வேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஆனால், 7-8 மணி நேரம் எதையும் சாப்பிடவில்லை என்பதால், காலையில் வெதுவெதுப்பான சூடுநீரைக் குடிப்பது நல்லது. எவ்வாறாயினும், தாகம் ஏற்படும் போது மட்டுமே குடிநீரை அருந்துவது நல்லது , ”என்று பாவ்சர் குறிப்பிட்டார்.
எப்படி குடிநீரை அருந்த வேண்டும்?
உட்கார்ந்திருக்கும் போது தான் குடிநீரை அருந்த வேண்டும் .
“நிற்கும்போது குடிநீரைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு செய்வதினால், சிறுநீரகங்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும், முடக்கு வாதத்திற்கு கூட வழிவகுக்கும். உட்கார்ந்த நிலையில் குடிநீரை அருந்துவதால்,நாம் நமது உடல் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சவும், உடலில் தேவைப்படும் பகுதிகளுக்கு தண்ணீரை அனுப்பவும் முடியும். மேலும்,நின்றுக் கொண்டு தண்ணீர் அருந்தும் போது, உடலுக்குள் வேகமாக தண்ணீர் செல்வதால், நரம்புகளை பதற்ற நிலைக்கு கொண்டு வருகிறது, ”என்று அவர் விளக்கினார்.
தண்ணீர் குடிக்க சிறந்த வழி எது?
ஒரு கிளாஸ் தண்ணீரைப் அப்படியே பருகுவதற்கு பதிலாக, சிப்-பை-சிப் குடிப்பது மிகவும் நல்லது. வெதுவெதுப்பான சூடுநீரைக் குடிப்பது நல்லது. "தயவுசெய்து குளிர்ந்த ஐஸ் நீரைத் தவிர்ப்பது நல்லது," என்று அவர் தெரிவித்தார்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
“பொழிவான தோல், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் போன்ற காரணங்களுக்காக நாம் அதிகமான தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் அது சரியானதல்ல. தண்ணீர் அதிகமாக அருந்துவதால், நமது செரிமான நெருப்புக் குறைத்து, கபா தோஷத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.எனவே, தண்ணீர் நீங்கள் போதுமான அளவு குடிப்பது தான் முக்கியமானது. அதிகமாக அருந்துவதால் பயனில்லை. உங்கள் உடலிடம் பேச முயற்சி செய்யுங்கள். உடலுக்கு எப்போது தண்ணீர் தேவைப்படும்? உணவு தேவைப்படும்? என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்தே விசயம்”என்று பாவ்சர் குறிப்பிட்டார்.