ஒவ்வொரு பெண்ணுக்கும் பெருங்குடல் பெருக்கத்தை சவாலாகவே கருதுகின்றனர். ஏனெனில், அவர்களுக்கு உடல் கொழுப்பு விகிதம் சற்று அதிகமாக உள்ளது.
மேலும், அது அவர்களின் இடுப்பு மற்றும் வயிற்றை சுற்றி காட்டுகிறது. குறிப்பாக கர்ப்பத்திற்குப் பிந்தைய பெண்கள் தங்கள் வயிற்றைச் சுற்றி எடையை அதிகரிப்பதை கண்கூடாக உணர்கின்றனர். இதனால், விரும்ப உணவு மட்டுமின்றி உடற்பயிற்சியையும் செய்ய தயங்குகின்றனர்.
இந்த மாதிரி பெண்களுக்கு யோகா, நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், எளிய வீட்டு வேலைகள், உடற்பயிற்சிகள் சிறந்ததாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தினமும் யோகா
இரட்டை பவன்முக்தாசனம் தொப்பையை குறைக்கும் சிறந்த யோகாசனங்களில் ஒன்றாகும். இதனை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில், முதுகு கீழே இருப்பது போன்று நேராக கால்களை நீட்டி படுக்கவும். பின்னர், மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, உங்கள் கால்களை நேராக 45 டிகிரி வரை உயர்த்தவும்.
அடுத்ததாக, மூச்சை வெளியேற்றி, உங்கள் தொடை வயிற்றைத் தொடும் வரை உங்கள் கால்களை முழங்கால்களில் மார்புக்கு மேல் வளைக்கவும். உங்கள் முழங்கால்களைக் கட்டிப்பிடித்து, உங்கள் விரல்களைப் பூட்டவும்.
இதையடுத்து, உங்கள் தலையை மெதுவாக உயர்த்தி, மூக்கின் நுனியை முழங்கால் வரை தொட முயற்சிக்கவும். இந்த நிலையை 30 வினாடிகள் வைத்திருங்கள், உங்கள் திறனுக்கு ஏற்ப 1 நிமிடம் வரை நீட்டிக்கலாம். எனினும், கடுமையான வலி, காயம் அல்லது கழுத்தில் விறைப்பு உள்ளவர்கள் தலையை மேலே தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
நிறைவாக, மூச்சை உள்ளிழுத்து, தலையை கீழே இறக்கி, கால்களை நேராக்கி, தரையில் கொண்டு வந்து ஓய்வெடுக்கவும்.
பவனமுக்தாசனம் அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வயிற்று உறுப்புகளை வலுப்படுத்த இது ஒரு சிறந்த பயிற்சியாகும்.
இது முதுகு வலியைப் போக்கும். வாயுப் பிரச்சனை, அசிடிட்டி, மூட்டுவலி, இதயப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனம் செய்வதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வீட்டில் இருந்து செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்
1) முதுகு தரையில் படும்படு படுத்துக்கொண்டு, ஒற்றைக் கால், இரட்டைக் காலுடன் சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகள் மிகவும் நல்லது. இதில், காலை 90 டிகிரியில் உயர்த்துவது அடிவயிற்றின் மேல் பகுதியிலும், 45 டிகிரியில் உயர்த்துவது வயிற்றின் நடுப்பகுதியிலும், 30 டிகிரியில் அடிவயிற்றிலும் வேலை செய்கிறது.
2) வெறுமனே நாற்காலியில் நேராக உட்கார்ந்து திருப்பவும், வளைக்கவும் அல்லது முன்னோக்கி வளைவுகளைச் செய்யவும்.
3) புஜங்காசனம் செய்யலாம். முதுகைப் பிடித்துக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்து மேல்நோக்கி நீட்டவும். இது நல்ல நுரையீரல் மற்றும் மார்பு விரிவாக்கத்திற்கு உதவுகிறது, சுவாச திறனை அதிகரிக்கிறது மற்றும் முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
4) ஒரு தலையணையை எடுத்து, உங்கள் முதுகில் வைத்து, அதை உங்கள் முழங்கால்களுக்கு இடையில் அழுத்தி, இடுப்பு உயர்த்துதல் அல்லது க்ரஞ்சஸ் செய்யுங்கள்.
5) பொதுவாக, காலை உடற்பயிற்சிகள் சிறந்தவை, ஏனெனில் அவை தொப்பை கொழுப்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், மனநிலை மற்றும் ஊட்டச்சத்து திருப்தியையும் மேம்படுத்த உதவுகின்றன.
மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் அது, உடலின் தசை வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவும்.
இவ்வாறு செய்யும்பட்சத்தில் பெல்லி டான்ஸ் நடனக் கலைஞர்கள் போன்று உங்களின் வயிறும் மெலிந்து காணப்பட வாய்ப்புகள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/