அழகு சாதனப் பொருட்களை எப்படி உபயோகிப்பது என்பது தொடர்பான பல்வேறு வீடியோக்கள் டிரெண்டாகும். அதில் ’டைமண்ட் உதடுகள்’ என்பது தொடர்பான வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் அழகு சாதனப் பொருட்கள் தொடர்பான பல்வேறு அழகுப்படுத்துதல், டிப்ஸ் வெளியாகிறது. மேட் அல்லது உலர்ந்த உதட்டுச் சாயம் கொண்ட லிப் ஸ்ட்டிக்குகள் அல்லது ஜொலிக்கும் அதாவது கிளாசி தன்மை கொண்ட லிப் ஸ்டிக் ஷேடுகள் கிடைக்கிறது. இந்நிலையில் இதை வைத்து நமக்கு பிடித்தமானது போல அழகுப்படுத்தி கொள்ளலாம். இந்நிலையில் நாம் ஐ -லைனர் வைத்துக்கூட உதட்டின் கோடுகள் நேராக வருவதற்கு பயன்படுத்துவோம்.

இந்நிலையில் தற்போது ’டைமண்ட் லிப்ஸ்’ என்ற லிப்ஸ்டிக் தீட்டும் முறை டிரண்டாகி உள்ளது. இந்நிலையில் இந்த டிரண்டு தொடர்பாக அழகு நிபுணர்களிடம் கேட்டபோது, ‘ நம்மிடம் உள்ள சில அழகு சாதன பொருட்களை வைத்தே இந்த டைமண்ட் லிப்ஸை பெற முடியும் என்பதால் இது டிரெண்டாகி வருகிறது. இதற்காக நீங்கள் உதட்டு அறுவை சிகிச்சை செய்யவோ, அல்லது ஃபில்லர்ஸ் எனப்படும் உதட்டின் அளவை மாற்றவோ தேவையில்லை” என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்த ’டைமண்ட் லிப்ஸை’ பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். சில்வர் நிறத்தில் உள்ள ஐ-லைனரை எடுத்துக்கொள்ள வேண்டும் அதை மேலும் உதடு மற்றும் கீழ் உதட்டில் வரைய வேண்டும். தொடர்ந்து ரோஸ் அல்லது உதட்டு நிறத்தில் உள்ள லிப்ஸ்டிக்கை தேர்வு செய்ய வேண்டும். அதை உதடு முழுவதும் போட வேண்டும். தற்போது டைமண்ட் லிப்ஸ் கிடைத்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“