scorecardresearch

தலைக்கு மருதாணி பேக் போடுவதற்கு முன்பு இதை கவனிங்க!

How to apply henna pack on hair Tamil News ப்ரஷ் உபயோகித்து மருதாணியைத் தடவுவது அவசியம்.

How to apply henna pack on hair Tamil News
How to apply henna pack on hair Tamil News

How to apply henna pack on hair Tamil News : முடி உதிர்வு ,பொடுகு, நரை முடி உள்ளிட்ட முடி சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கான ஒரு இயற்கையான தீர்வு, மருதாணி. பல ஆண்டுகளாகப் பெண்கள் இந்த இயற்கை சேர்மத்தின் சக்தியை தங்கள் முடியின் நுனிகளை வலுப்படுத்தவும், நீண்டு வளர்க்கவும், அழகுபடுத்தவும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, மருதாணி இலைகளை முடிக்கான சிகிச்சைக்கும் பயன்படுத்துகின்றனர். இப்போது அதனை பவுடராக அரைத்து பேக் செய்து உபயோகிக்கின்றனர்.

மருதாணி, கூந்தலுக்கு ஊட்டச்சத்து மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிப்பது உள்ளிட்ட பல நன்மைகளைக் கொடுக்கிறது. இது இயற்கை கலரிங் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனைக் கூந்தலுக்குப் பயன்படுத்தும்போது முகத்தில் படாமல் எப்படி உபயோகிப்பது என்று இனி பார்க்கலாம்.

*கூந்தலுக்கு மருதாணி பயன்படுத்துவதற்கு முன்பு சில குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டியது அவசியம். அந்த வரிசையில் தேங்காய் எண்ணெய், பெட்ரோலியம் ஜெல்லி, வெண்ணெய் போன்ற ஏதாவது ஒன்றை நெற்றி, கழுத்து, காது பகுதிகளில் நன்கு தேய்த்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் கழித்து, அரைத்த அல்லது தண்ணீரில் கலந்த ஹென்னா பவுடரை தலையில் தேய்த்துக் கொள்ளலாம். இதனால், மருதாணி முகத்தில் பட்டாலும் முகத்தில் கறைகள் படியாமல் இருக்கும்.

*அதேபோல மருதாணி பயன்படுத்துவதற்கு முன்பு லேசான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நன்கு சுத்தம் செய்திருக்கவேண்டும். கண்டிஷனர் எதுவும் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், இது முடியின் வேர்களில் சரியாக ஊடுருவாமல் இருக்கச் செய்யும்.

*மருதாணியைத் தலையில் தடவுவதற்கு முன்பு சிக்கல் இல்லாமல் சீவி, சிறிய பகுதிகளாகப் பிரித்து, பிறகு ப்ரஷ் உபயோகித்து மருதாணியைத் தடவுவது அவசியம். கைகளை உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும்.

*பிளாஸ்டிக் பை அல்லது கையுறைகள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது. மேலும், வலது புறத்திலிருந்து இடது புறமாக மருதாணியைப் பயன்படுத்துங்கள். இதனைத் தொடர்ந்து முன்னோக்கிப் பயன்படுத்துங்கள்.

*நெற்றிப் பகுதியில் பயன்படுத்தும்போது முன்னிலிருந்து பின்னோக்கி தடவுங்கள். தலை முழுவதும் தடவிய பிறகு, ஹேர் கவர் பயன்படுத்தலாம். இது மற்ற இடங்களுக்குப் பரப்புவதைத் தவிர்க்கிறது.

*ஹென்னா தடவி, இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தலையை ஊறவைத்து விடுங்கள். பிறகு குளிர்ந்த தலையை அலசுங்கள்.

*மருதாணி இயற்கையானது என்றாலும், சிலருக்கு இவ்வாமையை ஏற்படுத்தலாம். அதனால், பேக் போடுவதற்கு முன்பு பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அதாவது, காதின் பின்புறத்தில் சிறிதளவு பயன்படுத்திப் பாருங்கள். எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றால், முழு போக்கையும் தலையில் அப்லை செய்யலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: How to apply henna pack on hair tamil news