நம் வீட்டில் பலரும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டிருப்போம். குக்கரில் உணவு சமைக்கும் போது அரிசி, பருப்பு என எதுவாக இருந்தாலும் விசில் வரும் போது குக்கரில் இருந்து வெளியே பொங்கி சிந்தி விடும். அடுப்பு, சுவரிலும் பட்டுவிடும். இதை சுத்தம் செய்வது பெரும் சிரமமாக இருக்கும். இந்நிலையில், குக்கரில் உணவு சமைக்கும் போது வெளியே சிந்தி விடாமல் இருக்கு அதை தடுக்க சில டிப்ஸ் பற்றி பார்ப்போம். Hasana's Recipes என்ற யூடியூப் பக்கத்தில் இந்த டிப்ஸ் பகிரப்பட்டுள்ளது.
Advertisment
ஒவ்வொரு முறை சமைக்கும் போது குக்கர் மூடியை கழுவ வேண்டும். அப்போது விசில் ஓட்டை வழியாக தண்ணீர் வர வேண்டும். அடைப்பு எதுவும் இல்லாமல் வர வேண்டும். அடுத்தது கேஸ்கட்டையும் நன்கு கழுவ வேண்டும். அதையும் ப்ரீசரில் வைக்க வேண்டும்.
அதன்பின் வெயிட்டையும் சுத்தமாக கழுவ வேண்டும். அதில் உணவு சிக்கி இருந்தால் அதையும் சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும். அதிலும் நன்கு தண்ணீர் செல்கிறதா என்பதை செக் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது குக்கரில் இருந்து சாதம், பருப்பு வெளியில் சிந்தாமல் இருக்கும். இதை ட்ரை செய்து பாருங்க.