பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அந்த அளவுக்கு பாம்பு எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரு ஊர்வன.
அழகுக்காக வீட்டின் முன் வளர்க்கப்படும், புற்கள், பூச்செடிகளுக்குள் பாம்புகள் இலகுவில் தஞ்சம் அடைகின்றன. ஆனால் இந்த இடங்களில் ஈரப்பதம் இல்லாத சமயங்களில் ஈரப்பதத்தை நோக்கி பயணிக்கும் போது மனிதர்களிடம் பாம்பு சிக்கிக் கொள்கிறது. அல்லது மனிதன் அதன் தாக்குதலுக்கு உள்ளாகி விடுகின்றான.
பாம்புகளுக்கு பொதுவாக அதிர்வுகளை உணரும் திறன் இருப்பதால் மறைந்தே அது வாழும் இயல்பு கொண்டது.
ஒரு வேளை மறைந்துக் கொள்வதற்கு இடமில்லாத போது தன்னை மனிதர்கள் தாக்க வருவதைப் போல் அது உணர்ந்தால் தனது பாதுகாப்புக் கருதி தீண்டிவிடும்.
கட்டு விரியன் பாம்புகளை வெளியேற்ற உதவும் 7 வழிகள்:
1.பாம்பு வேலிகளை அமைத்தல்
2. புதர்களையும், புல்வெளிகளையும் ஒழுங்கமைக்கவும்.
3. பாம்புகளுக்கான உணவுகளை தரைகளில் தவிருங்கள்
4. உங்கள் புல் தரையிலிருந்து குப்பைகளையும், தேவையற்ற பொருள்களையும் நீக்கவும்,
5. கோழியை வளருங்கள்
6. பாம்புகளை பிடித்து காட்டிற்குள் விடுதல்
7. பாம்பு விரட்டும் சாதனத்தை பயன்படுத்துதல்
நீண்ட புல் புதருக்குள் தன்னை மறைத்துக் கொள்ளும் இயல்புடையது காட்டு விரியன் பாம்பு.
அதே மாதிரி சீரற்று வளரும் தாவரங்களை பாம்புகள் பெரும்பாலும் தவிர்த்து விடும். எனவே பாம்புகள் குடிகொள்ளாத அளவிற்கு, புற்கள் வளரும் பகுதிகளை அவ்வப்போது ஒழுங்கமைக்க வேண்டும்.
வெளிப்புறத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றுக:
குப்பைகள் நிறைந்திருக்கும் பகுதிகளில் கூட கட்டுவிரியன் பாம்புகள் தங்கி விடும்.
இருட்டு பகுதி கூட பாம்புகளுக்கு மிகவும் பிடித்த இடம். மரங்களிலிருந்து கொட்டப்படும் இலைகள் தொடர்ச்சியாக சுத்தம் செய்யாமல் இருக்கும் போது பாம்புகள் புகுவதற்கான இடமாக அது மாறிப் போய் விடுகிறது.
எனவே உங்கள் வீட்டுப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பாம்புக்கு பிடித்த உணவை வீட்டின் சுற்றத்தில் வீசாதீர்கள்:
பாம்புகளின் இனச்சேர்க்கை காலத்தில் பாம்புகள் இரைத் தேடி வீடுகளை நோக்கி அலையும்.
கட்டுவிரியான் பாம்புகள் வீட்டிற்கு வராமல் தடுக்க சில வழிகள் உள்ளன.
அதாவது, கட்டுவிரியான் பாம்புகள், பல்லிகள், தவளை, பூச்சிகள், நத்தைகள், மற்றும் சிறிய பாலூட்டிகள் என அனைத்தையும் உணவாகக் உண்ணும்.
அதனால் இந்த விலங்குகள் உங்களது புல் தரைப் பகுதியில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். எனவே பூச்சிக் கொல்லி மருந்துகளை உங்கள் காலி நிலத்தில் தெளிப்பதன் மூலம் பாம்புகள் வீட்டுப் பகுதிக்கு வராமல் 6 தடுக்கலாம்.
பூச்சிகள் இல்லாத போது தவளைக்கோ , பல்லிக்கோ உங்களது நிலத்தில் வேளை இருக்காது. இவையாவும் இல்லையெனில் பாம்புகளும் உங்கள் பகுதிக்கு வராது.
உங்கள் கொல்லைப் புறத்தில் கோழியை வளருங்கள்:
கட்டுவிரியன் பாம்புகளுக்கு கோழி முட்டைகள் மீது அதிக விரும்பம் உண்டு.
கோழிகள் தற்காப்பு அரணாக விளங்கி பாம்புகளை உள்ளே நுழைய விடாமல் தடுக்கிறது.
ஆனால் சில சமயங்களில் பாம்புகள் கோழிகளைக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.
பாம்பு பிடிப்பவர்களை அணுகவும்:
பாம்புகளை கொல்லாமல் அப்புறப்படுத்த வேண்டும் எனில் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்து பாம்பை பிடித்து காட்டிற்குள்ளோ அல்லது வனத்துறையிடமோ கொடுக்க முடியும். அவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் அவர்கள் எங்கு அதைச் சேர்கக் வேண்டுமோ அங்கு அதைச் சேர்த்துவிடுவார்கள்.
பாம்பு வேலிகள் அமைத்தல்
பாம்பு வேலிகள் பல்வேறு கொள்கைகளின் அடிப்படியாக இயங்கக்கூடியது. சில சமயங்களில் பாம்பு வேலிகள் அமைந்திருக்கும் அமைப்புகள் பாம்புகள் அதன்மீது வலம் வரச் செய்யும்.
பாம்புகள் அதன் மீது வலம்வந்தால் அது ஒரு கண்ணி போல செயல்பட்டு பாம்பை பிடித்துச் செல்லும். இது பாம்புகளிடம் நிச்சயம் உங்களைப் பாதுகாக்கும்.