/indian-express-tamil/media/media_files/2025/11/02/kitchen-2025-11-02-15-55-51.jpg)
வீடுகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் இடம் சமையல் அறை தான். என்னதான் வீட்டில் எல்லா அறைகளும் வசதியாக இருந்தாலும் சமையலறை விசாலமாக இருந்தால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த இடத்தில் தேவையான சௌகரியங்கள் இருந்தால்தான் சமைப்பது எளிதாக இருக்கும். அதைப் பற்றி இந்தப் தொகுப்பில் பார்க்கலாம்.
சமையலறை அமைப்பு
சமையலறை காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சமையல் செய்யும் மேடை சரியான உயரத்தில் இருக்க வேண்டும். இலையென்றால் சமைக்கும்போது கடினமாக இருக்கும். மேலும் தோள்பட்டை, கழுத்து வலி போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதுமட்டுமல்லாமல், அடுப்பு வைத்திருக்கும் மேடையும் கொஞ்சம் விசாலமாக இருக்க வேண்டும். அப்போது தான் பொருட்களை அதில் வைத்து பயன்படுத்த எளிதாக இருக்கும்.
காற்றோட்டம்
சமையல் அறை எப்போதும் காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும் படி கட்ட வேண்டும். அப்போது தான் சிரமம் இல்லாமல் சமைக்க முடியும். மேலும், கதவுகளை உட்புறமாக இல்லாமல் வெளிப்புறமாக வைத்தால் நடக்கும் பொழுது கால்களில் இடித்து கொள்வது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. சமையல் அறை மேடையின் கீழ் உள்ள செல்ஃப்கள் (shelves) தேவையான உயரத்தில் இருக்க வேண்டும். எல் டைப் சமையல் மேடை என்றால், மேடையின் கீழ் நிலத்திலிருந்து சுமார் 4 அங்குலம் உயரத்தில் அமைத்துக் கொள்ளலாம். இது வீடு துடைக்கும்போது தண்ணீர் உள்ளே செல்லாமல் தடுக்க உதவும். கதவுகளும் ஈரத்தால் பாழாகாது.
சிங்க் மற்றும் வசதிகள்
சமையலறையில் இருக்கும் சிங்க் பெரியதாகவும் அதன் பைப்புகளில் அடைப்பு ஏற்பட்டால் எளிதாக சீரமைக்கக்கூடிய வசதிகளுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவது நல்லது. சிங்க் வைத்திருக்கும் இடத்தின் மேல் அல்லது பக்கவாட்டில் ஜன்னல் வைத்திருப்பது அவசியம். இதனால் நல்ல காற்றோட்டமும் கிடைக்கும்; சிங்க் ஈரமில்லாமல் எளிதில் உலரும், வாடையும் இல்லாமல் இருக்கும். சிங்க் பக்கத்தில் சிறிது இடம்விட்டால் கழுவிய பாத்திரங்களை அதன் பக்கத்தில் வைத்து தண்ணீர் வடிய வைத்து எடுத்து அடுக்கிவிடலாம்.
சிங்கிற்கும் மேடைக்கும் இடையில் சிறிய அளவு சுவர் அல்லது மறைப்பு இருப்பது பாத்திரம் துலக்கும்போது அல்லது கை அலம்பும்போது தண்ணீர் மேடையில் தெறிக்காமல் தடுக்கப்படும். சிங்க் வைத்திருக்கும் சுவரில் லைட் கலர் (light colour) பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், அழுக்கு பட்டால் எளிதில் தெரியும் என்பதால் சுத்தமாக வைத்திருக்கத் தோன்றச் செய்யும். மேலும், சிங்க் இருக்கும் இடத்தின் ஒரு அலமாரி வைத்தால் சோப்பு, பாத்திரம் கழுவும் லிக்யூட் போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம். அவசரத்திற்கு தேடும் வேலை இருக்காது.
கூடுதல் வசதிகள்
சமையல் அறையில் ஃபேன் பயன்படுத்துவது. இதனால் புகை மற்றும் வெப்பம் சீக்கிரமாக வெளியேறுவதுடன் உங்களுக்கு வியர்வை ஏற்படாமல் இருக்கும். சிலிண்டர் வைக்கும் பொழுது ரோலிங் ஸ்டாண்ட் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதனால் சமையல் அறை தரைகளில் கீறல்கள் விலாமல் இருப்பதுடன் சிலிண்டர் மாற்றவும் எளிதாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us