Advertisment

உங்க பி.எஃப் அக்கவுண்டில் எவ்ளோ பணம் இருக்கு? வீட்டில் இருந்தபடி அறிய ஈஸி வழி

உங்களுடைய பி.எஃப் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறீர்களா? அலுவலகம் செல்ல நேரமில்லையா, பரவாயில்லை வீட்டில் இருந்தபடியே உங்கள் பி.எஃப் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஈஸியான வழி இதோ.

author-image
WebDesk
New Update
PF Balance, PF Balance Check, PF Balance Check in minutes, How to Check PF Balance in sitting at home, EPFO, PF Balance Check easy way, உங்க பி.எஃப் அக்கவுண்டில் எவ்ளோ பணம் இருக்கு, வீட்டில் இருந்தபடி பி.எஃப் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஈஸி வழி

உங்களுடைய பி.எஃப் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறீர்களா? அலுவலகம் செல்ல நேரமில்லையா, பரவாயில்லை வீட்டில் இருந்தபடியே உங்கள் பி.எஃப் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஈஸியான வழியை இங்கே கூறுகிறோம்.

Advertisment

இணைய வசதி இல்லாமல் வீட்டில் இருந்தபடியே உங்களுடைய பி.எஃப் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று அறிந்துகொள்ள உங்களுக்கு ஈஸியான வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு மிஸ்டு கால் அழைப்பு போதும் உங்கள் பி.எஃப் கணக்கில் எவ்வளவு இருகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

மாத சம்பளம் வாங்குபவர்கள், பி.எஃப் கணக்கு உள்ளவர்கள் உங்களுடைய பி.எஃப் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள, ஊழியர்களின் வைப்பு நிதி நிறுவனத்திற்கு செல்ல வேண்டியதில்லை. அதே நேரத்தில், யு.ஏ.என் எண்களைக்கூட ஞாபகம் வைத்திருக்க வேண்டியதில்லை. யு.ஏ.என் எண் மறந்துவிட்டதே என்று கவலைப்படத் தேவையில்லை. ஒரே மிஸ்டு கால் போதும் பி.எஃப் கணக்கில் உள்ள பணத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

யு.ஏ.என் எண்ணில் தான் உங்களுடைய பி.எஃப் கணக்குகள் தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளன. பல ஊழியர்கள் அவ்வப்போது வேலைகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அதனால், அவர்களுக்கு பல பி.எஃப் கணக்குகள் உள்ளன. இந்த அனைத்து பி.எஃப் கணக்குகளின் இருப்பை நீங்கள் யு.ஏ.என் எண்ணைக் கொண்டு சரிபார்க்கலாம். அனைத்து பணியாளருக்கும் யு.ஏ.என் எண் வாழ்நாள் முழுவதும் எண்ணாகத்தான் இருக்கும்.

இப்போது யு.ஏ.என் எண் இல்லாமலும் உங்கள் பி.எஃப் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம். யு.ஏ.என் எண் இல்லாமலும் பி.எஃப் அக்கவுண்டில் பணம் எவ்வளவு இருக்கிறது என்று நீங்கள் சரிபார்க்கலாம்:

உங்கள் பி.எஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை எப்படி சரிபார்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

படி 1: முதலில் நீங்கள் epfindia.gov.in தளத்துக்கு செல்ல வேண்டும்.

படி 2: நீங்கள் இந்த தளத்திற்கு சென்று ‘உங்கள் இ.பி.எஃப் இருப்பை அறிய இங்கே கிளிக் செய்யவும்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

படி 3: இதற்குப் பிறகு நீங்கள் ஒரு வழிமாற்று இணைப்பு மூலம் epfoservices.in/epfo/ பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். இதற்குப் பிறகு நீங்கள் ‘உறுப்பினர் இருப்புத் தகவல்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

படி 4: இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் மாநிலத்தின் EPFO ​​அலுவலக இணையதள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

படி 5: இதற்குப் பிறகு உங்கள் ‘PF கணக்கு எண்’, பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

படி 6: இதற்குப் பிறகு நீங்கள் 'சமர்ப்பி' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

படி 7: இந்த செயல்முறை முடிந்தவுடன், உங்கள் பி.எஃப் கணக்கு இருப்பு உங்கள் இணையதளத்தில் தெரியும்.

அதே போல, பி.எஃப் கணக்கில் எவ்வளவு உள்ளது என்பதை மிஸ்டு கால் மூலமும் சரிபார்த்துக்கொள்ளலாம்.

உங்கள் யு.ஏ.என் எண் செயல்படுத்தப்பட்டால், யு.ஏ.என் எண்ணுடன் உள்நுழைவதன் மூலமும் உங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். இது தவிர, இ.பி.எஃப்.ஓ-​​இன் எஸ்.எம்.எஸ் சேவையின் கீழ் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN என்று டைப் செய்து அனுப்புவதன் மூலம் உங்கள் பி.எஃப் கணக்கின் இருப்பை தெரிந்துகொள்ளலாம்.

உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-229014016 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் பி.எஃப் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Epfo Epfo Alert Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment