உங்களுக்கான சரியான கற்றாழை ஜெல்லை எப்படி தேர்வு செய்வது?

நல்ல தரமான கற்றாழை ஜெல் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்திற்கு கூடுதலாக உதவுகிறது. ஏன் என்பது இங்கே.

நல்ல தரமான கற்றாழை ஜெல் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்திற்கு கூடுதலாக உதவுகிறது. ஏன் என்பது இங்கே.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aloe-vera-gel

How to choose perfect aloe vera jel for your skin

கற்றாழை ஜெல் நிறைய தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.

ஒரு புதிய தயாரிப்பைப் பயன்படுத்திய பிறகு, நீங்கள் சீசனல் டிரைனெஸ் அல்லது தோல் அழற்சியை எதிர்கொண்டாலும், கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது என்பது உங்களுக்கு அடிக்கடி கிடைக்கும் ஒரு பொதுவான ஆலோசனை. நல்ல தரமான கற்றாழை ஜெல், மீட்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்திற்கு கூடுதலாக நன்மை சேர்க்கிறது.

Advertisment

ஆனால், உங்களுக்கு ஏற்ற கற்றாழை ஜெல்லை எப்படி தேர்வு செய்வது என்று தெரியுமா?

பிரபல அழகு நிபுணர் ஆருஷி தாபர், பல நன்மைகளைப் பெற, சரியான கற்றாழை ஜெல்லைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

பொருட்களைக் கவனியுங்கள்

நுகர்வோர்’ வாய் வார்த்தைகளை நம்பியிருந்த காலம் போய்விட்டது. இன்று, மக்கள் எப்போதும் இன்கிரெடியன்ட் லிஸ்ட்-ஐ தேடுகின்றனர். - கற்றாழை ஜெல் வாங்கும் போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும், குறிப்பாக தோல் பராமரிப்புப் பொருளை வாங்கும் போது நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

Advertisment
Advertisements

“கற்றாழை சாறு’ மூலப்பொருள் பட்டியலில் அதிகமாக உள்ளதா எனப் பார்க்கவும்; தூய்மையான கற்றாழை சிறந்தது. இயற்கையான, நிறம் மற்றும் நறுமணம் இல்லாத தயாரிப்புகளைத் தேர்வு செய்ய தாபர் பரிந்துரைக்கிறார்.

இது உங்கள் தோல் வகைக்கு பொருந்துமா?

கற்றாழை ஜெல்லில் 98 சதவீதம் தண்ணீர் இருப்பதால், இது அனைத்து சருமத்திற்கும் பொருந்தும். இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளது, இவை அனைத்தும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகும். இது எண்ணெய், மற்றும் வறண்ட சருமத்தை நீரேற்றம் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், சென்சிட்டிவான சருமத்திற்கும் இது இனிமையானதாக இருக்கும்.

பயன்படுத்த சிறந்த நேரம் எது?

அதிர்ஷ்டவசமாக, சக்திவாய்ந்த தோல் பராமரிப்பு பொருட்கள் போலல்லாமல், நீங்கள் கற்றாழையை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நீங்கள் இதை காலை, மாலை வேளையில், மாய்ஸ்சரைசராகவோ அல்லது முகம் மற்றும் ஹேர் மாஸ்க்காகவோ பயன்படுத்தலாம். "ஆண்கள்’ இதை ஆஃப்டர் ஷேவ் ஆகப் பயன்படுத்தலாம், அதன் பயன்கள் எல்லையற்றவை".

கற்றாழை ஜெல்லை எப்படி வித்தியாசமாக பயன்படுத்தலாம்?

"ஒருவர் இதை கண்களுக்குக் கீழ் சிகிச்சைக்காக அல்லது மேக்கப்-க்கு ஒரு ப்ரைமராகவும் பயன்படுத்தலாம். உங்கள் சருமம் மந்தமாக இருக்கும் போதெல்லாம், கற்றாழை ஜெல்லில் சிறிது சர்க்கரையை கலந்து முகம், கழுத்து, பகுதிகளில் அப்ளை செய்யுங்கள், இது ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டர்; அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்துங்கள்” என்கிறார் தாபர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: