தோசை கல் மேல் இந்த பொருளை தடவுங்க… தோசை பிஞ்சு போகாமல் வரும்; சிம்பிள் டிப்ஸ் இதோ!

வீட்டில் தோசை சுடும்போது, தோசை சரியாக எடுக்க முடியாமல் பிஞ்சுபோகிறதா அதற்கு, உங்கள் வீட்டு தோசைக்கல்லை இப்படி சுத்தம் செய்து இந்த பொருளைத் தடவினால் தோசை பிஞ்சு போகாமல் வரும். தோசைக்கல்லை எப்படி சுத்தம் செய்ய வேண்டும், என்ன பொருள் தடவ வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
dosa

வீட்டில் வீட்டில் தோசை சுடும்போது, தோசை சரியாக எடுக்க முடியாமல் பிஞ்சுபோகிறதா, இனி கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக சுவையோ சுவை குக்கிங் என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

வீட்டில் தோசை சுடும்போது, தோசை சரியாக எடுக்க முடியாமல் பிஞ்சுபோகிறதா அதற்கு, உங்கள் வீட்டு தோசைக்கல்லை இப்படி சுத்தம் செய்து இந்த பொருளைத் தடவினால் தோசை பிஞ்சு போகாமல் வரும். தோசைக்கல்லை எப்படி சுத்தம் செய்ய வேண்டும், என்ன பொருள் தடவ வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

Advertisment

வீட்டில் வீட்டில் தோசை சுடும்போது, தோசை சரியாக எடுக்க முடியாமல் பிஞ்சுபோகிறதா, இனி கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக சுவையோ சுவை குக்கிங் என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள். தோசை பிஞ்சு போவதற்கு காரணம் தோசைக்கல்லில் படிந்திருக்கிற எண்ணெய் பிசுபிசுப்பு கறை ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், முதலில் தோசைக்கல்லை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் சுத்தம் செய்ய வேண்டிய தோசைக்கல்லை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டவ்வை லோ ஃபிளேமில் வைத்துக்கொள்ளுங்கள். அதில் தோசைக்கல்லை எடுத்து வையுங்கள். கரை உள்ள இடங்களை ஒரு துணி வைத்து துடையுங்கள். ஏனென்றால், தோசைக்கல் சூடாக இருக்கும். கையை சுட்டுக்கொள்ளாதீர்கள். அடுத்து, வினிகர் 2 3 மூடி தோசைக்கல்லில் கரை உள்ள பகுதிகளில் ஊற்றுங்கள். லெமன் சால்ட் அல்லது பேக்கிங் சோடா எடுத்து தூவுங்கள். ஒரு அரை எலுமிச்சை பழத்தை எடுத்து கரை உள்ள இடங்களில் தேயுங்கள். பின்னர் தண்ணீர் ஊற்றி துடையுங்கள். பின்னர், ஒரு கம்பி நார் எடுத்து பத்திரமாக தேயுங்கள். 

அடுத்து தோசைக்கல்லை எடுத்து நன்றாகத் தேயுங்கள், கறை முற்றிலும் போகிற அளவுக்கு அரை மணி நேரம் தேயுங்கள். தேய்த்து முடித்த பிறகு, நன்றாகக் கழுவிவிட்டுப் பார்ங்கள் பளபளவென இருக்கும். 

Advertisment
Advertisements

இப்போது அப்படியே தோசை மாவு ஊற்றாதீர்கள். அதற்கு முன், ஸ்டவ்வில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள். வெங்காயம் கொண்டு தேயுங்கள். அடுத்து, ஒரு முட்டை எடுத்து உடைத்து ஊற்றி பொடிமாஸ் போல செய்யுங்கள். பிறகு அதை எடுத்துவிடுங்கள். ஒரு துணியால் லேசாக துடைத்துவிட்டு, இப்போது தோசை ஊற்றிப் பாருங்கள் பேப்பர் போல மொறுமொறுவென தோசை பிஞ்சு போகாமல் வரும். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: