/indian-express-tamil/media/media_files/2025/10/09/download-2025-10-09t13-2025-10-09-13-44-16.jpg)
வீட்டில் சமைக்கும் போது சிங்க் அடைப்பு ஏற்படும் பிரச்சனை பலருக்கும் அடிக்கடி எதிர்படும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக, சமைத்த பிறகு பாத்திரம் கழுவும் நேரத்தில், தண்ணீர் சிங்கில் தேங்கி நிற்பது, அது வெளியே செல்லாத நிலை உருவாவதை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். இந்தத் தோற்றத்தை சரி செய்ய கைவைத்து சிங்க் அடைப்பை எடுப்பது சிரமமாகவும், அசுத்தமாகவும் இருக்கும். இந்நிலையில், உங்கள் வீட்டில் உள்ள ஒரு காலி வாட்டர் பாட்டிலால் மிக எளிமையாக இந்த பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று அறிவுறுத்துகிறது யூடியூப் சேனல் ‘ரம்யாஸ் தமிழ் டிப்ஸ்’
வழக்கமான சிங்க் அடைப்பு பிரச்சனை:
உணவு சமைக்கும் போது, கருவேப்பிலை, வெங்காயத்தொட்டு, தக்காளி விதைகள் போன்ற சிறிய பொருட்கள் சிங்க் வழியாக பைப்பில் சென்று, அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் தண்ணீர் வெளியே செல்லாமல், சிங்கில் தேங்கி நிற்கும். இதனை கைவிட்டு எடுப்பது சிலருக்கு மிகவும் எளிதான வேலை போல தோன்றினாலும், உண்மையில் அது அசுத்தமானதும் சிரமமானதும் தான்.
காலி வாட்டர் கேனுடன் கூடிய சூப்பர் ஹேக்:
தேவையானவை:
- காலியான ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் அல்லது வாட்டர் கேன்
- உப்பு – ஒரு கைப்பிடி
- எலுமிச்சை – 1 (பாதியாக நறுக்கவும்)
- பழைய செய்தித்தாள்
- கொதித்த நீர்
செய்முறை:
- முதலில், உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு காலி வாட்டர் கேனை எடுக்கவும்.
- அதன் மூடியை கழற்றி, சிங்க் தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில், பாட்டிலின் வாயைப் பகுதியை சுருக்கமாக வைக்கவும்.
- பாட்டிலில் இருக்கும் காற்றை நீங்கள் அழுத்தியவுடன், அது ஒரு வகையான ப்ரெஷரை உருவாக்கி, அடைத்துள்ள இடத்திலிருந்து தண்ணீரை வெளியே தள்ளும்.
- இதனால், சிங்க்கில் தேங்கிய தண்ணீர் வெளியேறிவிடும்.
பைப் அடைப்பு இருந்தால் என்ன செய்வது?
முதலில், சிங்க்கில் உள்ள தண்ணீர் போகும் துளையில் ஒரு கைப்பிடி உப்பை சேர்க்கவும். அதன்பின், ஒரு எலுமிச்சையின் சாறை நன்றாக பிழிந்து அந்த உப்பின் மீது ஊற்றுங்கள். இதனுடன், ஒரு பழைய செய்தித்தாளை உருண்டையாக சுருட்டி, அந்தத் துளையை இறுக்கமாக அடைத்து விட வேண்டும். சுமார் அரை மணி நேரம் கழித்து, அந்த செய்தித்தாளை அகற்றுங்கள். அந்த நேரத்தில் பைப்பில் இருக்கும் பூச்சி, புழு போன்றவை மேலே வந்திருக்கும். அவற்றை அகற்றி, பிறகு கொதித்த நீரை சிங்கில் ஊற்றி நன்றாகக் கழுவுங்கள். இந்த முறையால் பைப்பில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் நீங்கியும், சிங்க் சுத்தமாகியும் விடும்.
கூடுதல் பராமரிப்பு:
- வாரத்தில் 2 முறை சிங்க்க்கை சோப்புடன் நன்றாகக் கழுவுங்கள்.
- உணவுப் பொடிகள் மற்றும் கழிவுகள் பைப் வழியாக செல்லாதவாறு கவனிக்கவும்.
- எலுமிச்சை தோலை சிங்கில் போட்டு வைத்தால், சிங்க் வாசனையாகவும் இருக்கும்.
வீட்டில் இருக்கும் சாதாரணமான ஒரு வாட்டர் பாட்டிலால், சிங்க் அடைப்பு பிரச்சனையை தீர்க்க முடியும் என்பது நிச்சயமாக ஆச்சரியமளிக்கும் விஷயம். இனி கைவிட்டு அடைப்பை எடுக்கும் சிரமமே வேண்டாம். வீட்டில் உள்ள பொருட்களையே பயன்படுத்தி, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உங்கள் கிச்சனை பராமரியுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.