டாய்லெட்-டில் மஞ்சள் கறை; பாத்ரூமில் உப்புக் கறை... இந்தப் பொடியை ஒருமுறை இப்படி தூவிப் பாருங்க!
வீட்டு பாத்ரூமில் இருக்கும் உப்புக் கறை மற்றும் மஞ்சள் கறையை எவ்வாறு சுலபமாக சுத்தம் செய்வது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். பாத்ரூமை சுத்தமாக பராமரிக்க இந்த முறை உதவியாக இருக்கும்.
வீட்டு பாத்ரூமில் இருக்கும் உப்புக் கறை மற்றும் மஞ்சள் கறையை எவ்வாறு சுலபமாக சுத்தம் செய்வது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். பாத்ரூமை சுத்தமாக பராமரிக்க இந்த முறை உதவியாக இருக்கும்.
ஒரு வீட்டின் பாத்ரூம் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவ்வீட்டில் வசிப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஏனெனில், வீட்டில் இருக்கக் கூடிய பாத்ரூம் சுத்தமாக இல்லாவிட்டால், பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
Advertisment
வீட்டில் இருக்கும் வரவேற்பறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலான நேரத்தில் பாத்ரூமுக்கு நாம் கொடுப்பதில்லை. வீட்டின் மற்ற இடங்களை சுத்தமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட பாத்ரூமை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் பாத்ரூமை எப்படி சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
வீட்டில் இருக்கும் காலாவதியான 3 மாத்திரைகளை இடித்து பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதனை ஒரு கப்பில் போட்டு அத்துடன் ஒரு ஸ்பூன் டீத்தூள், இரண்டு ஸ்பூன் சோப்பு பௌடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். இதனை வீட்டில் இருக்கும் பாத்ரூம், வாஷ் பேசின் மற்றும் டைல்ஸ்களில் நன்றாக ஸ்ப்ரே செய்ய வேண்டும். இதன் பின்னர், இந்தக் கலவையை தெளித்த இடங்களை முற்றிலும் தேய்த்துக் கழுவலாம். குறிப்பாக, கை வலிக்க தேய்த்துக் கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. லேசாக கழுவினாலே சுத்தமாகி விடும்.
Advertisment
Advertisements
இந்த சிம்பிளான டிப்ஸை பின்பற்றி நம் வீட்டின் பாத்ரூமை சுத்தப்படுத்தி, நம்முடைய ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும்.