காய்ச்சல் மாத்திரை 2 போதும்... அழுக்கு படிந்த மெத்தையை ஈஸியா க்ளீன் பண்ணலாம்!
வீட்டில் பயன்படுத்தும் மெத்தை அழுக்கு படிந்து காணப்பட்டால் அதனை எப்படி சுலபமாக சுத்தப்படுத்துவது என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் மெத்தையை புதியது போன்று மாற்ற முடியும்.
வீட்டில் பயன்படுத்தும் மெத்தை அழுக்கு படிந்து காணப்பட்டால் அதனை எப்படி சுலபமாக சுத்தப்படுத்துவது என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் மெத்தையை புதியது போன்று மாற்ற முடியும்.
நம் வீட்டில் பயன்படுத்தும் மெத்தை விரிப்புகள், போர்வைகள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்வோம். ஆனால், மெத்தைகளை பெரும்பாலும் சுத்தம் செய்ய மாட்டோம். ஏனெனில், மெத்தையை சுத்தப்படுத்துவது மிகவும் கடினமான வேலையாக இருக்கும். ஆனால், இந்த டிப்ஸை பின்பற்றுவதன் மூலம் மெத்தையை எளிமையாக சுத்தப்படுத்தலாம்.
Advertisment
இதற்காக, இரண்டு காலாவதியான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகளை இடித்து பொடியாக்க வேண்டும். பின்னர், பாதியளவு மாத்திரை பொடி, முகத்திற்கு பயன்படுத்தும் பௌடர் சிறிதளவு, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
இந்தப் பொடியை நேரடியாக மெத்தையில் தூவாமல், ஒரு வடிகட்டியின் மூலம் மெத்தை முழுவதும் தூவி விட வேண்டும். இந்தப் பொடியை தூவிய பின்னர், சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும். இவை மெத்தையில் உள்ள துர்நாற்றத்தை போக்கி விடும்.
இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் மீதமிருக்கும் மாத்திரை பொடி, ஒரு ஸ்பூன் கம்ஃபோர்ட் சேர்த்து கலக்க வேண்டும். இந்த தண்ணீரில் பழைய சாக்ஸை நனைத்து, அதனை க்ளவுஸ் போன்று கையில் மாட்டிக் கொண்டு, மெத்தையை சுத்தம் செய்யலாம். இப்படி செய்வதால் மெத்தையில் முதலில் தூவி இருந்த பொடியுடன் சேர்த்து அனைத்து கறைகளும் நீங்கி விடும்.
Advertisment
Advertisements
இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை நம் வீட்டில் இருக்கும் மெத்தையை எளிதாக சுத்தப்படுத்தலாம். இதன் மூலம் துர்நாற்றத்தை போக்குவதுடன், நோய்த் தொற்று பரவும் அபாயத்தையும் கட்டுப்படுத்த முடியும்.