தண்ணீரில் இத மட்டும் சேருங்க… ஃபேன் கிளீன் பண்றது இனி ஈஸி தான்!
நம் வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேனை எவ்வாறு சுலபமான முறையில் சுத்தம் செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்கு மற்றவர்களின் உதவி தேவைப்படாது.
நம் வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேனை எவ்வாறு சுலபமான முறையில் சுத்தம் செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்கு மற்றவர்களின் உதவி தேவைப்படாது.
வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் சுலபமாக சுத்தம் செய்து விடலாம். குறிப்பாக, பெரிதாக இருக்கும் சோஃபா, கட்டில் போன்ற பொருட்களை கூட சுலபமாக சுத்தப்படுத்தலாம். ஆனால், சீலிங் ஃபேனை சுத்தப்படுத்துவது கடினமாக இருக்கும்.
Advertisment
பொதுவாக, சீலிங் ஃபேனை சுத்தம் செய்வதற்கு ஏணி அல்லது உயரமான ஸ்டூல் தேவைப்படும். மேலும், இதனை க்ளீன் செய்ய வீட்டில் இருக்கும் பெண்கள், ஆண்களின் உதவியை நாட வேண்டியதாக இருக்கும்.
ஆனால், இவை எதுவும் இன்றி நாமே சீலிங் ஃபேனை மிக எளிதாக சுத்தம் செய்து கொள்ள முடியும். இதற்காக சில டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸை நாம் பின்பற்றலாம். குறிப்பாக, ஆண்களின் உதவியும் இதற்கு தேவைப்படாது.
ஒரு கப் நிறைய தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். இதில், கால் கிளாஸ் வினிகர் மற்றும் இரண்டு துளிகள் ஷாம்பூ சேர்த்து கலக்க வேண்டும். இப்படி செய்தால் சீலிங் ஃபேன் துடைப்பதற்கு தேவையான தண்ணீர் தயாராகி விடும்.
Advertisment
Advertisements
இப்போது, ஒரு உயரமான ஒட்டடை குச்சியில் துணிப்பையை சுற்றி கட்டிக் கொள்ளலாம். இந்த ஒட்டடை குச்சியில், நாம் முதலில் தயார் செய்து வைத்த தண்ணீரை நன்றாக தெளிக்க வேண்டும். இனி, இந்த ஒட்டடை குச்சியை கொண்டு சீலிங் ஃபேனை சுலபமாக சுத்தம் செய்யலாம்.