கிச்சன் சிங்க் அடைத்து இருக்கா? காலி வாட்டர் பாட்டில் போதும்; இப்படி செய்தால் ஈஸி கிளீன் பண்ணலாம்!
வீட்டில் கிச்சன் சிங்க் அடைத்து இருக்கிறதா, கைவிட்டு கிளீன் பண்ண சிரமமாக இருக்கிறதா, கவலையே படாதீர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் காலி வாட்டர் பாட்டிலை வைத்து ஈஸியாக கிளீன் பண்ணலாம். எப்படி கிளீன் பண்ண வேண்டும் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

கிச்சனில் சிங்க் அடைத்துகொண்டால் கைவைத்து அடைப்பை எடுப்பது சிரமமாக இருக்கும். அப்படி சிரமப்படுபவர்களுக்கு ரம்யாஸ் தமிழ் டிப்ஸ் (Ramyas Tamil Tips) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பாரான டிப்ஸ் வழங்கியிருக்கிறார்கள். அதை அப்படியே தருகிறோம்.
வீட்டில் கிச்சன் சிங்க் அடைத்து இருக்கிறதா, கைவிட்டு கிளீன் பண்ண சிரமமாக இருக்கிறதா, கவலையே படாதீர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் காலி வாட்டர் பாட்டிலை வைத்து ஈஸியாக கிளீன் பண்ணலாம். எப்படி கிளீன் பண்ண வேண்டும் என்பதைப் பார்க்கலாம் வாங்க.
Advertisment
பலருடைய வீடுகளிலும் கிச்சன் சிங்க் அடைத்துக் கொள்வது அடிக்கடி நடக்கும். அப்படி கிச்சனில் சிங்க் அடைத்துகொண்டால் கைவைத்து அடைப்பை எடுப்பது சிரமமாக இருக்கும். அப்படி சிரமப்படுபவர்களுக்கு ரம்யாஸ் தமிழ் டிப்ஸ் (Ramyas Tamil Tips) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பாரான டிப்ஸ் வழங்கியிருக்கிறார்கள். அதை அப்படியே தருகிறோம்.
வீட்டு கிட்சனில் பாத்திரம் கழுவும்போது பல நேரங்களில், கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி போன்றவை அடைத்துக்கொள்ளும். அப்படி அடைத்துக்கொள்ளும்போது சிங்க் முழுவதும் தண்ணீர் தேங்கிவிடும். அப்படியான நேரங்களில் கைவிட்டு அடைப்பை எடுக்க வேண்டியதிருக்கும். கைவிட்டு எடுக்கும்போது அசூயையாகவும் சிரமமாகவும் இருக்கும். இனிமேல் சிங்க் அடைத்துக்கொண்டால், கைவிட்டு அடைப்பை எடுக்க வேண்டாம். உங்கள் வீட்டில் காலி ஒரு லிட்டர் வாட்டர் கேன் இருந்தால், எடுத்துக்கொள்ளுங்கள். அதை மூடியைக் கழட்டிவிட்டு, சிங்க் அடைப்பு உள்ள இடத்தில் வாட்டர் கேன் வாய்ப் பகுதியை வைத்து அழுத்துங்கள். வாட்டர் கேனில் உள்ள காற்று அடைப்பை நீக்கி சரி செய்யும். சிங்க்கில் உள்ள தண்ணீர் வெளியேறும்.
Advertisment
Advertisements
அதே போல, வீட்டு கிட்சனில் உள்ள சிங்க்கில் உள்ளே இருக்கும் பைப்பில் அடைப்பு ஏற்பட்டால், கவலைப்படாதீர்கள். சிங்க்கில் தண்ணீர் போகும் துளையில், ஒரு கைப்பிடி உப்பு போடுங்கள். ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாகக் கட் பண்ணி சாறு பிழிந்துவிடுங்கள். பிறகு, ஒரு பழைய செய்தித் தாளை உருண்டையாக சுருட்டி, சிங்க் துளையை அடைத்துவிடுங்கள். அரை மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் அந்த பைப்பில் இருந்த பூச்சி, புழு எல்லாம் மேலே வந்துவிடும். அவற்றை அப்புறப்படுத்திவிட்டு. தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து சிங்க்கில் ஊற்றுங்கள். இப்படி செய்தால், சிங்க்கில் தண்ணீர் போகும் பைப்பில் உள்ள அடைப்புகள் சரியாகும்.
வாரத்திற்கு 2 முறை சிங்க்கை நன்றாக சோப்பு போட்டு கழுவிடுங்கள். எலுமிச்சை தோலை சிங்க்கில் போட்டு வைத்தால் சிங்க் வாசனையாக இருக்கும்.