அழுக்கு படிந்த சீப்பு புதுசு போல் மாறும்… தண்ணீயே தேவையில்லை; இப்படி டிரை பண்ணுங்க!
அழுக்கு படிந்த சீப்பை சுத்தம் செய்ய சிரமப்படுகிறீர்களா, தண்ணீரில் போட்டு கழுவ வேண்டாம், இப்படி செய்தால் போதும் அழுக்கு படிந்த சீப்பு புதுசு போல மாறும். உங்கள் விட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
அழுக்கு படிந்த சீப்பை சுத்தம் செய்ய சிரமப்படுகிறீர்களா, தண்ணீரில் போட்டு கழுவ வேண்டாம், இப்படி செய்தால் போதும் அழுக்கு படிந்த சீப்பு புதுசு போல மாறும். உங்கள் விட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
வீட்டில் அன்றாடம் பயன்படக்கூடிய பல நல்ல சமையல் குறிப்புகளை சபீ விளாக்ஸ் (Sabee Vlogs) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். Photograph: (Sabee Vlogs)
அழுக்கு படிந்த சீப்பை சுத்தம் செய்ய சிரமப்படுகிறீர்களா, தண்ணீரில் போட்டு கழுவ வேண்டாம், இப்படி செய்தால் போதும் அழுக்கு படிந்த சீப்பு புதுசு போல மாறும். உங்கள் விட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
Advertisment
வீட்டில் அன்றாடம் பயன்படக்கூடிய பல நல்ல சமையல் குறிப்புகளை சபீ விளாக்ஸ் (Sabee Vlogs) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அந்த வகையில், அழுக்கு படிந்த சீப்பை எளிதாக எப்படி சுத்தம் செய்வது என்று ஒரு சூப்பரான டிப் கூறியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
நீங்கள் வீட்டில் அழுக்கு படிந்த சீப்பை எப்படி சுத்தம் செய்வது என்று யோசிக்கிறீர்களா, தண்ணீரில் போட்டு கழுவ வேண்டும் என்று சிரமப்படுகிறீர்களா கவலையே படாதீர்கள். வீட்டில் இருக்கும் அழுக்கு படிந்த சீப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் முகத்துக்கு போடும் பவுடரை போடுங்கள், பிறகு, பழைய டூத் பிரஷ்ஷை எடுத்து சுத்தம் செய்யுங்கள். அவ்வளவுதான் அழுக்கு படிந்த சீப்பு இப்போது புதுசு போல மாறியிருக்கும்.
Advertisment
Advertisements
அதே போல, தேங்காய் எண்ணெய் வாங்கி வந்து சில நாட்களிலேயே ஒரு விதமான கமறிய வாடை வரும். அதனால், அந்த தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த முடியாமல் போகும். அதனால், தேங்காய் எண்ணெய் வாங்கி வந்த உடன், அதில் 3 மிளகு போட்டுவிடுங்கள். பிறகு, தேங்காய் எண்ணெய் கெட்டு போகாமல் இருக்கும்.
அதே போல, கால்மிதியை துவைக்க சிரமமாக இருக்கிறதா, கவலைப்படாதீர்கள். ஒரு பெரிய வாளி எடுத்துக்கொள்ளுங்கள், அதில் மூடி ஹார்பிக் ஊற்றுங்கள். அதில் சூடான தண்ணீர் ஊற்றுங்கள், அதில் கால்மிதியைப் போட்டு ஒரு குச்சியை எடுத்து அழுத்தி அலசுங்கள். பிறகு, வேறு ஒரு வாளியில் எடுத்து போட்டு அலசுங்கள். அவ்வளவுதான், கால்மிதியில் அழுக்கு எல்லாம் போய்விட்டிருக்கும்.