அழுக்கு படிந்த மெத்தை; ஒரு பாக்கெட் ஷாம்பூ போதும்… ஈசியா க்ளீன் பண்ணலாம்

வீட்டில் அழுக்கு படிந்த மெத்தையை எப்படி ல்ளீன் பண்ணுவது என்று தெரியாமல் திணறுகிறீர்களா? கவலைப் படாதீர்கள் ஒரு பாக்கெட் ஷாம்பூ போதும் அழுக்கு படிந்த மெத்தையை எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

வீட்டில் அழுக்கு படிந்த மெத்தையை எப்படி ல்ளீன் பண்ணுவது என்று தெரியாமல் திணறுகிறீர்களா? கவலைப் படாதீர்கள் ஒரு பாக்கெட் ஷாம்பூ போதும் அழுக்கு படிந்த மெத்தையை எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

author-image
WebDesk
New Update
bed

வீட்டில் அழுக்கு படிந்த மெத்தையை ரொம்ப எளிமையான முறையில் க்ளீன் பண்ணுவது எப்படி என்று நளினி மாணிக் குக்கிங் (nalinimanickcooking) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர்.

வீட்டில் அழுக்கு படிந்த மெத்தையை எப்படி ல்ளீன் பண்ணுவது என்று தெரியாமல் திணறுகிறீர்களா? கவலைப் படாதீர்கள் ஒரு பாக்கெட் ஷாம்பூ போதும் அழுக்கு படிந்த மெத்தையை எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

Advertisment

வீட்டில் அழுக்கு படிந்த மெத்தையை ரொம்ப எளிமையான முறையில் க்ளீன் பண்ணுவது எப்படி என்று நளினி மாணிக் குக்கிங் (nalinimanickcooking) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

உங்கள் வீட்டில் உள்ள மெத்த அழுக்கு படிந்து உள்ளதா? அதை க்ளீன் பண்ணுவது எப்படி என்று தெரியாமல் திகைத்துப்போயுள்ளீர்களா? கவலைப்பட வேண்டாம். ஒரு பவுல் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக்கொள்ளுங்கள். தண்ணீர் வெதுவெதுப்பாக சூடாக இருக்கும்போது, அதில் 2-3 மூடி வினிகர் ஊற்றுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் ஷாம்பூ ஊற்றுங்கள். அதனுடன் 2 கற்பூரம் கட்டிகளைத் தூள் செய்து சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நன்றாக நனைத்து பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். 

Advertisment
Advertisements

இந்த காட்டன் துணியை ஒரு குக்கர் மூடியைக் கவர் செய்து கட்டுக்கள். பிறகு, அந்த குக்கர் மூடியை நீங்கள் க்ளீன் பண்ண வேண்டிய மெத்தை மீது தேய்த்து க்ளீன் பண்ணுங்கள். இப்படி செய்வதன் மூலம் மெத்தையில் உள்ள அழுக்கு நீங்கிவிடும். மேலும், மெத்தையில் இருக்கும் எறும்புகள் கற்பூர வாசனைக்கு வராமல் போய்விடும். அதுமட்டுமல்ல, மெத்தையில் வியர்வை, அழுக்கு வாடை போய்விடும். உங்கள் மெத்தையும் க்ளினாக புதுசு போல மாறிவிடும். உங்கள் வீட்டில் உள்ள அழுக்கு படிந்த மெத்தையை இந்த முறையில் க்ளீன் பண்ணி பாருங்கள். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: