கொஞ்சம் கல் உப்பு போதும்… கேஸ் ஸ்டவ் ஈஸியா கிளீன் பண்ணலாம்!
உங்கள் வீட்டு சமையலறையில் கேஸ் ஸ்டவ் குழம்பு, சாம்பார் கறை படிந்து அழுக்காக இருக்கிறதா, அதை சுத்தம் செய்ய சிரமப்படுகிறீர்களா, கவலை வேண்டாம், கொஞ்சம் கல் உப்பு, ஒரு பக்கம் பழைய நியூஸ் பேப்பர் போது பளபளணு மின்னும்படி ஈஸியா கிளீன் பண்ணலாம்.

Advertisment
பொதுவாக வீடுகளில் சமைக்கும்போது, கேஸ் ஸ்டவ் மீது சாம்பார், குழம்பு எல்லாம் சிந்தி காய்ந்துவிடும். இதனால், கேஸ் ஸ்டவ் கறை படிந்து இருக்கும். இதை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் சிரமமாக இருக்கும். அப்படியே சுத்தம் செய்தாலும், கேஸ் ஸ்டவ்வைத் துடைக்கப் பயன்படுத்திய துணியை அலசுவது இன்னும் சிரமமான ஒன்றாக இருக்கும். உங்களுக்காகவே நளினி மாணிக் குக்கிங் (nalinimanickcooking)என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியிருக்கிறார்கள். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
வீட்டில் கேஸ் ஸ்டவ் மீது படிந்திருக்கும் குழம்பு, சாம்பார் உள்ளிட்ட கறைகளைப் போக்க ஒரு எளிய வழி இதோ. ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பழைய நியூஸ் பேப்பர் ஒரு பக்கத்தை எடுத்து துண்டு துண்டுகளாகக் கிழித்து அந்த பாத்திரத்தில் போடுங்கள். பிறகு, அதில் ஒரு கைப்பிடி உப்பு போடுங்கள். அடுத்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்குங்கள். இப்போது அந்த காகிதத்தை எடுத்து கேஸ் ஸ்டவ்வைத் தேய்த்து துடையுங்கள். பிறகு, ஒரு ஒரு பழைய நியூஸ் பேப்பரை எடுத்து துடையுங்கள். கேஸ் ஸ்டவ் சுத்தமாகி பளபளனு மின்னும். உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.