ரூ.2 காபி தூள் போதும்; இப்படி செய்தால் கிச்சன் சிங்க் பளபளக்கும்… கெட்ட வாடை நீங்கும்!
வீட்டில் கிச்சன் சிங்க் கறைபடிந்து அழுக்காக இருக்கிறதா, அதை எப்படி சுத்தம் செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா, கவலைப்படாதீர்கள். 2 ரூபாய் காபி தூள் போதும் உங்கள் வீட்டு கிச்சன் சிங்க் பளபளப்பாகும், கெட்ட வாடையும் நீங்கும்.
வீட்டில் கிச்சன் சிங்க் கறைபடிந்து அழுக்காக இருக்கிறதா, அதை எப்படி சுத்தம் செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா, கவலைப்படாதீர்கள். 2 ரூபாய் காபி தூள் போதும் உங்கள் வீட்டு கிச்சன் சிங்க் பளபளப்பாகும், கெட்ட வாடையும் நீங்கும்.
அன்றாடம் வீட்டு வேலைகளில் பயன்படக்கூடிய பல பயனுள்ள டிப்ஸ்களை கோமுஸ் லைஃப்ஸ்டைல் (Gomu's Lifestyle) யூடியூப் சேனலில் வழங்கி வருகின்றனர். Photograph: (Gomu's Lifestyle)
வீட்டில் கிச்சன் சிங்க் கறைபடிந்து அழுக்காக இருக்கிறதா, அதை எப்படி சுத்தம் செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா, கவலைப்படாதீர்கள். 2 ரூபாய் காபி தூள் போதும் உங்கள் வீட்டு கிச்சன் சிங்க் பளபளப்பாகும், கெட்ட வாடையும் நீங்கும், அது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
Advertisment
அன்றாடம் வீட்டு வேலைகளில் பயன்படக்கூடிய பல பயனுள்ள டிப்ஸ்களை கோமுஸ் லைஃப்ஸ்டைல் (Gomu's Lifestyle) யூடியூப் சேனலில் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கிச்சன் சிங்க் எப்படி சுத்தம் செய்வது என்று ஒரு சூப்பரான டிப்ஸ் கூறியுள்ளனர்.
உங்கள் வீட்டில் கிச்சன் சிங்க் கறைபடிந்து அழுக்காக இருக்கிறதா, அதை எப்படி சுத்தம் செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா, கவலைப்படாதீர்கள். கிச்சன் சிங்க்கில் 2 ரூபாய் காபி தூள் மட்டும் போட்டாலே போதும் சிங்க் கெட்ட வாடை இல்லாமல் வைத்துக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் புதியதாக ஒரு காபித் தூள் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காபித் தூள் பாக்கெட் ஒன்றை பயன்படுத்திவிட்டு, மீதி வைக்கும்போது கெட்டியாக கருப்பாக மாறிவிடும். அதையேகூட பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
உங்கள் வீட்டு கிச்சன் சிங்க்கை காபி தூள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம். ஒரு சின்ன பவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ரூபாய் காபி தூள் பாக்கெட்டைப் பிரித்துக்கொட்டுங்கள். இதனுடன், பாத்திரம் கழுவும் லிக்யூட் 2 ஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். 1 ஸ்பூன் அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் தண்ணீர் கொஞ்சம் ஊற்றி ஒர் ஸ்பூனில் நன்றாகக் கலக்கிக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த காபி பேஸ்ட்டை எடுத்து சிங்க்கில் போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும். இப்படி தேய்க்கும்போது சிங்க்கில் உள்ள கறை போய்விடும். அதுமட்டுமல்ல, சிங்க்கில் இருக்கும் கெட்ட வாடையும் நீங்கிவிடும். சிங்க்கும் பளபளக்கும். இதை உங்கள் வீட்டில் டிரை பண்ணி பாருங்கள்.