மிக்ஸியில் கல் உப்பு போட்டு அரைங்க… ஜாரில் மறைந்திருக்கும் நீண்ட நாள் அழுக்கு நீங்கும்; பிளேடும் ஷார்ப்பாகும்!

வீட்டில் பயன்படுத்தும் மிக்சி ஜார் அழுக்கு பிடித்து இருக்கிறதா, கவலைப் படாதீர்கள், ஜாரில் மறைந்திருக்கும் நீண்ட நாள் அழுக்கு போக மிக்ஸியில் கல் புப்பு போட்டு அரையுங்கள், அழுக்கும் போகும், பிளேடும் ஷார்ப் ஆகும்.

வீட்டில் பயன்படுத்தும் மிக்சி ஜார் அழுக்கு பிடித்து இருக்கிறதா, கவலைப் படாதீர்கள், ஜாரில் மறைந்திருக்கும் நீண்ட நாள் அழுக்கு போக மிக்ஸியில் கல் புப்பு போட்டு அரையுங்கள், அழுக்கும் போகும், பிளேடும் ஷார்ப் ஆகும்.

author-image
WebDesk
New Update
mixy jar

அன்றாடம் பயன்படுத்தும் மிக்ஸியில் நீண்ட நாள் அழுக்கு பிடித்திருந்தால் அதை எப்படி சுத்தம் செய்வது என்று ஹைட்ஸ் 24 (Heights 24) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் கூறியுள்ளனர். அதை உங்களுக்கு இங்கே அப்படியே தருகிறோம். image source: YouTube/ Heights 24

வீட்டில் பயன்படுத்தும் மிக்சி ஜார் அழுக்கு பிடித்து இருக்கிறதா, கவலைப் படாதீர்கள், ஜாரில் மறைந்திருக்கும் நீண்ட நாள் அழுக்கு போக மிக்ஸியில் கல் புப்பு போட்டு அரையுங்கள், அழுக்கும் போகும், பிளேடும் ஷார்ப் ஆகும்.

Advertisment

அன்றாடம் பயன்படுத்தும் மிக்ஸியில் நீண்ட நாள் அழுக்கு பிடித்திருந்தால் அதை எப்படி சுத்தம் செய்வது என்று ஹைட்ஸ் 24 (Heights 24) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் கூறியுள்ளனர். அதை உங்களுக்கு இங்கே அப்படியே தருகிறோம்.

வீட்டில் அன்றாடம் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய பொருட்களில் ஒன்று மிக்ஸி. அந்த மிக்ஸியை பயன்படுத்திய பிறகு நாம் துடைத்து வைத்து விடுவோம். ஆனால்ம் மிக்ஸி ஜாரை யாரும் அக்கறையோடு சுத்தம் செய்வது கிடையாது. வீட்டு மிக்ஸி ஜாருக்கு உள்ளேயும் அடியிலும் எவ்வளவு அழுக்கு இருக்கிறது இந்த முறையில் சுத்தம் செய்து பார்த்தால் உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

Advertisment
Advertisements

மிக்ஸி ஜாரை சுத்தம் செய்யும் முறை:

சுத்தம் செய்ய வேண்டிய மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் உள்ளே கல் உப்பு ஒரு டேபிள் ஸ்பூன் போட வேண்டும்.     அதன் பிறகு, மிக்ஸியில் வைத்து இரண்டு ஓட்டு ஓட்டுங்கள். உங்கள் மிக்ஸி பளபளப்பாக மாறியிருக்கும். அதோடு, மிக்ஸி ஜார் பிளேடுகளில் உள்ள அழுக்கு மொத்தமாக வெளியேறி இருக்கும். அதே சமயம் மிக்ஸி ஜார் பிளேடும் ஷார்ப்பாக இருக்கும். அதன் பிறகு, பாத்திரம் தேய்க்கும் சோப்பு போட்டு கழுவி விடுங்கள். 

சிலர் அசைவ உணவு செய்யும்போது, மிகிஸியில் அசைவ உணவை போட்டு அரைப்பார்கள். அரைத்த பிறகு, அந்த மிக்ஸி ஜாரில் அந்த அசைவ உணவின் வாடை போகாமல் அப்படியே இருக்கும். அதற்கு, பேக்கிங் சோடாவை போடுங்கள். அதற்கு பிறகு, கால் கப்பு அளவு தண்ணீரை விட்டு,  ஒருமுறை ஓடவிட்டீர்கள் என்றால், அதிலிருந்து அசைவ வாடை போய்விடும்.

அதே போல, மிக்ஸி ஜாருக்கு அடிப்பக்கமும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது 2 மாதத்திற்கு ஒருமுறையோ மிக்ஸி ஜாரின் அடி பாகத்தை சுத்தம் செய்வது நல்லது. 

சுத்தம் செய்ய வேண்டிய ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கின்னத்தில் பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை பழசாற்றை நன்றாகக் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, அதை மிக்ஸி ஜாரை கவிழ்த்து வைத்து அடிப் பாகத்தில் நன்றாகத் தடவுங்கள். 10 நிமிடம் ஊறிய பிறகு, பழைய டூத் பிரஷ்ஷை வைத்து நன்றாகத் தேய்த்தால் உள்ளே படிந்திருக்கும் அழுக்கு வெளியேறும். பிறகு, டூத் பேஸ்ட்டையும் பாத்திரம் தேய்க்கும் ல்க்யூடையும் ஒன்றாகக் கலந்து தடவி சுத்தம் செய்யுங்கள். மிச்சம் மீதி இருக்கும் அழுக்கும் வெளியேறிவிடும். பிறகு, மிக்ஸி ஜாரை மொத்தமாகத் துடைத்து வெயிலில் காய வையுங்கள். அவ்வளவுதான் மிக்ஸி ஜார் புதுசு போல பளபளப்பாக மாறியிருக்கும். இந்த முறையில் உங்கள் வீட்டில் உள்ள மிக்ஸி ஜாரை சுத்தம் செய்து பாருங்கள். எப்படி இருக்கிறது என்று பாருங்கள். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: