அழுக்கு தலையணை பளிச்சென மாறும்; இதை டிரை பண்ணுங்க!
நம் வீட்டில் இருக்கும் தலையணையை எப்படி சுத்தப்படுத்தலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் தலையணையில் இருந்து பரவும் கிருமிகளை கட்டுப்படுத்த முடியும்.
நம் வீட்டில் இருக்கும் தலையணையை எப்படி சுத்தப்படுத்தலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் தலையணையில் இருந்து பரவும் கிருமிகளை கட்டுப்படுத்த முடியும்.
நாம் பயன்படுத்தும் தலையணை உறைகளை அடிக்கடி துவைத்து சுத்தப்படுத்துவோம். ஆனால், தலையணைகளை பெரும்பாலும் சுத்தம் செய்திருக்க மாட்டோம். இவ்வாறு சுத்தம் செய்யப்படாத தலையணையில் இருந்து நிறைய நோய்த் தொற்றுகள் பரவுவதாக கூறப்படுகிறது.
Advertisment
குறிப்பாக, இரவு முழுவதும் தலையணையில் முகம் பதித்து உறங்குகின்றோம். இதனால், சுமார் 8 மணி நேரம் தலையணையை தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இப்படி செய்வதால் வியர்வை, தலையில் இருக்கும் பொடுகு உள்ளிட்ட பல அழுக்குகளும் தலையணையில் இருக்கும்.
இப்படி இருக்கும் தலையணையை சரியாக சுத்தம் செய்யாமல் தொடர்ந்து பயன்படுத்தும் போது, சருமம் தொடர்பான பிரச்சனைகள், சுவாச கோளாறுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். அந்த வகையில் தலையணை உறைகள் மட்டுமின்றி, தலையணைகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இந்தக் குறிப்பில் தலையணைகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்று பார்க்கலாம்.
தலையணையை சுத்தம் செய்ய வாஷிங் மெஷின், சோப் உள்ளிட்டவற்றை கூட பயன்படுத்த வேண்டாம். அதை விட சிம்பிளான டிப்ஸ் உள்ளது. முதலில் தலையணை முழுவதும் பேக்கிங் சோடா தூவி விட வேண்டும். இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, அதனை துணி கொண்டு துடைத்து விடலாம்.
Advertisment
Advertisements
மற்றொரு புறம், நுனிப்பகுதி கூர்மையாக இருக்கும் ஒரு கிளாஸை எடுத்து, அதில் கர்ச்சிஃப் வைத்து கட்டி விட வேண்டும். மேலும், இரண்டு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக ஹேண்ட் வாஷ் மற்றும் ஷம்பூ சேர்த்து கலக்க வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் சிறிதளவு கம்ஃபோர்ட் கலக்க வேண்டும். இப்போது, கர்ச்சிஃப் சுற்றி வைத்திருந்த கிளாஸை, ஷம்பூ கலந்து வைத்திருந்த தண்ணீரில் முக்கி, தலையணையின் இரு புறமும் துடைக்க வேண்டும். இதேபோல், கம்ஃபோர்ட் ஊற்றி வைத்திருந்த தண்ணீரை கொண்டும் துடைக்க வேண்டும். இப்படி செய்தால் தலையணை சுத்தமாகி விடும்.
இறுதியாக, தலையணை காய்வதற்காக சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுக்கலாம். இப்போது உங்கள் தலையணை பார்ப்பதற்கு புதிது போன்று மாறிவிடும்.