தூக்கி போடும் ஆரஞ்சு பழத்தோலில் இதைச் சேர்த்தால் போதும்… துருப்பிடித்த குழாய்கள் புதுசு போல் மாறும்!
உங்கள் வீட்டில் உள்ள குழாய்கள் உப்புப் படிந்து துருப்பிடித்தது போல ஆகிவிட்டடா, அதைக் கழுவி சுத்தம் செய்ய சிரமமாக இருக்கிறதா, கவலைப்படாதீர்கள். ஆரஞ்சுப் பழத் தோலை வைத்து தயாரிக்கப்படும் பேஸ்ட் மூலம் தேய்த்தால் துருப்பிடித்த குழாய்கள் புதுசு போல் மாறும்.
உங்கள் வீட்டில் உள்ள குழாய்கள் உப்புப் படிந்து துருப்பிடித்தது போல ஆகிவிட்டடா, அதைக் கழுவி சுத்தம் செய்ய சிரமமாக இருக்கிறதா, கவலைப்படாதீர்கள். ஆரஞ்சுப் பழத் தோலை வைத்து தயாரிக்கப்படும் பேஸ்ட் மூலம் தேய்த்தால் துருப்பிடித்த குழாய்கள் புதுசு போல் மாறும்.
கறைபடிந்த துருப்பிடித்த ஸ்டீல் குழாய்களைக் கழுவி சுத்தம் செய்வது என்பது சிரமமாக இருக்கும். உங்களுக்காகவே, ஆரஞ்சுப் பழத்தோலில் ஒரு பேஸ்ட் செய்து ஜே அண்ட் ஜோஷ் கிச்சன் (J and Josh kitchen) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர்.
உங்கள் வீட்டில் உள்ள குழாய்கள் உப்புப் படிந்து துருப்பிடித்தது போல ஆகிவிட்டடா, அதைக் கழுவி சுத்தம் செய்ய சிரமமாக இருக்கிறதா, கவலைப்படாதீர்கள். ஆரஞ்சுப் பழத் தோலை வைத்து தயாரிக்கப்படும் பேஸ்ட் மூலம் தேய்த்தால் துருப்பிடித்த குழாய்கள் புதுசு போல் மாறும். அது எப்படி என்று பார்ப்போம் வாங்க.
Advertisment
வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டீல் குழாய்கள், தொடர்ந்து உப்பு தண்ணீர் பட்டு கறை படிந்து இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல துருப்பிடித்து விடும். அப்படி கறைபடிந்த துருப்பிடித்த ஸ்டீல் குழாய்களைக் கழுவி சுத்தம் செய்வது என்பது சிரமமாக இருக்கும். உங்களுக்காகவே, ஆரஞ்சுப் பழத்தோலில் ஒரு பேஸ்ட் செய்து ஜே அண்ட் ஜோஷ் கிச்சன் (J and Josh kitchen) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
உங்கள் வீட்டில் ஸ்டீல் குழாய் கறைபடிந்து துருப்பிடித்து இருக்கிறதா, கவலைப் படாதீர்கள். உங்கள் வீட்டுக்கு ஆரஞ்சுப் பழங்கள் வாங்கிவந்தால், பழத்தை சாப்பிட்டுவிட்டு, ஆரஞ்சுத் தோலைத் தூக்கிப் போடாதீர்கள். 2 ஆரஞ்சுப் பழங்களின் தோலை எடுத்துக்கொள்ளுங்கள். அதை மிக்ஸியில் போடுங்கள், அதனுடன் 2 டீஸ்பூன் அளவு டூத் பேஸ்ட் சேருங்கள். லேசாக தண்ணீர் ஊற்றி நன்றாக நைஸாக அரையுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நல்லா நைஸாக அரையுங்கள்.
Advertisment
Advertisements
இந்த பேஸ்ட்டை கைகளில் எடுத்து வீட்டில் கறைபடிந்த துருப்பிடித்த ஸ்டீல் குழாய்கள் மீது தடவி லேசாக தேயுங்கள். பிறகு, ஸ்க்ரப் வைத்து தேயுங்கள். இதையடுத்து, குழாய்களைத் தண்ணீர் ஊற்றி கழுவுங்கள். இப்போது பாருங்கள் குழாய்கள் புதுசு போல மாறியிருக்கும்.
அதே போல, பாத் ரூமில் ஓரங்களில் கறை படிந்து பழுப்பு நிறத்தில் மோசமாக இருக்கும். அந்த இடங்களிலும் இந்த ஆரஞ்சு பேஸ்ட்டை போட்டு தேய்த்தால் கறை போய்விடும். உங்கள் வீட்டில் இந்த டிப்ஸைப் பயன்படுத்திப் பாருங்கள்.